ஓராண்டிற்கு நோ ஸ்மார்ட்போன்! சவாலில் $100000 வெல்லும் பெண்.!

|

வைட்டமின்வாட்டரின் 'ஸ்க்ரால் ப்ரீ ஃபார் இயர்’ என்ற சவாலை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? 100,000 டாலர் மதிப்புள்ள பரிசுத் தொகையைப் பெறுவதற்காக ஒரு ஆண்டு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா என மக்களுக்கு இதில் சவால்விடுக்கப்பட்டது.

பெற வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன.

இச்சவாலை ஏற்றுக்கொண்ட நியூயார்க்-ஐ சேர்ந்த இந்த பெண் ஏற்கனவே ஸ்மார்ட்போன் இல்லாமல் எட்டு மாதங்களை கடந்துவிட்டார். மேலும் அந்த மிகப்பெரிய பரிசுத்தொகையை பெற வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் வைட்டமின்வாட்டர் நிறுவனம் ஒரு விசித்திரமான மற்றும் தனித்துவமான சவாலை அறிவித்து இணைய சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாமல் ஒரு வருடம் செலவழிக்க சரியான நபர்களை தேர்வு செய்ய ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிரம்பி வழிந்தன. இருப்பினும் இந்த சவாலை முயற்சிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் எலனா முக்டன் மட்டுமே.

 உணர்ந்தாலும்

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதான புனைகதை எழுத்தாளர் எலனா முக்தான். ஏற்கனவே இச்சவாலில் எட்டு மாதங்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட அவர், இந்த அனுபவம் தனது கண்களை திறந்துவிட்டதாகவும், விடுவிக்கப்பட்டதை போல உணர்வதாகவும் கூறுகிறார். தனது ஸ்மார்ட்போனுடன் எவ்வளவு ஒன்றிவிட்டார் என்பதை தீர்மானிக்க இது அனுமதித்துள்ளது என்று கூறுகிறார். அவர் தனது இணைபிரியா ஸ்மார்ட்போனை சில நேரங்களில் தவறவிட்டதாக உணர்ந்தாலும், இச்சவால் முடிந்த பிறகும் அது இல்லாமல் வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.!6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.!

செல்ல விரும்பவில்லை

இதுகுறித்து முக்டன் கூறுகையில், ‘இந்த ஓராண்டு போட்டி முடிந்தாலும் கூட நான் ஒருபோதும் ஸ்மார்ட்போனை பயனபடுத்தமாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். தொழில்நுட்பத்தை நம்பலாம் என்று நான் நினைக்கவில்லை. என்னிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால், நான் அதை தவறாகப் பயன்படுத்துவதற்கும், நேரத்தை வீணடிப்பதற்கும், இரவு முழுவதும் எல்லா நேரமும் விழித்திருக்கவும், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விடுவதற்கும் உகந்த சூழ்நிலைக்கு நான் திரும்பிச் செல்வேன் என்று சந்தேகிக்கிறேன். உண்மையில் அதற்கெல்லாம் நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. ' என்கிறார்.

விட சற்று கடினமாக்கியுள்ளது

ஸ்க்ரோல் ஃப்ரீ ஃபார் இயர் சவாலைத் தொடங்கியதும் எலனா முக்டன் தனது ஐபோன் 5எஸ் தவிர்த்துவிட்டு, ஒரு கியோசெரா ஃபிளிப் தொலைபேசியை உபயோகிக்க துவங்கினார். அதை அவர் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அவர் தனது லேப்டாப், டெஸ்க்டாப் பிசி மற்றும் அமேசான் எக்கோ போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் அவரிடம் ஸ்மார்ட்போன் இல்லாதது சில சூழ்நிலைகளை அவர் நினைத்ததை விட சற்று கடினமாக்கியுள்ளது.

100,000டாலரை வெல்லமுடியும்

அந்த அனுபவங்களைப் பற்றி அவர் கூறுகையில், 'ஒருமுறை, நான் சீடாக் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டேன். ஏனென்றால் நான் எழுதிய தொலைபேசி எண் தவறானது மற்றும் சரியானதை நான் பார்க்க எந்த வழியும் இல்லை. வாடகைவண்டி அல்லது உபெரை அழைக்க எந்த வழியும் இல்லை. யாரும் எனக்கு உதவக்கூடிய நிலையிலும் இல்லை ' என்கிறார். ஆயினும்கூட, இந்த சூழ்நிலைகளை அவரால் சமாளிக்க முடிந்தது என்றும், ஸ்மார்ட்போன் இல்லாத கடந்த எட்டு மாதங்கள் உண்மையில் தனது வாழ்க்கையின் சிறந்த நேரங்களில் ஒன்றாக இருந்தன என்றும் அவர் நம்புகிறார்.

அவரால் இன்னும் நான்கு மாதங்களுக்கு தாக்குபிடிக்க முடிந்தால், 100,000டாலரை வெல்லமுடியும். இருப்பினும் விதிகளின்படி, ஸ்க்ரோல் ஃப்ரீ ஃபார் இயர் சவாலின் போது அவர் ஏமாற்றவில்லை என்பதை நிரூபிக்க பொய்-கண்டறிதல் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
This Girl Is About To Win $100,000 For Remaining Smartphone Free For A Year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X