புதிய ஹாடோரோ ஒன்பிளஸ் 6 விற்பனை துவக்கியது.! விலை எவ்வளவு தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தனது ஒன்பிளஸ் 6 மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் ஐ உலக சந்தையில் அறிமுகம் செய்தது.

|

ஒன்பிளஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தனது ஒன்பிளஸ் 6 மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் ஐ உலக சந்தையில் அறிமுகம் செய்தது.

புதிய ஹாடோரோ ஒன்பிளஸ் 6 விற்பனை துவக்கியது.! விலை எவ்வளவு தெரியுமா?

அறிமுகம் ஆகி விற்பனைக்கு வந்த முதல் வாரத்திலேயே அதிக யூனிட்களை விற்பனை செய்து ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளி கடும் போட்டி நிலவரத்தை உருவாக்கியது.

ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் 6 இன் துவக்க விலை 34,999 என்று நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்குக் களமிறங்கியது. சந்தையில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபோன்களின் விலையை விட இவை குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் இதன் விலை சற்று அதிகம் என்று சொல்லப்பட்டாலும், விலையை மிஞ்சும் வகையில் அதன் செயல்திறன் மற்றும் அனைத்துச் சேவைகளும் அட்டகாசமாய் இருந்தது என்பதே உண்மை.

ஸ்பெஷல் எடிஷன்

ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் 6 விற்பனைக்கு வந்த பொது அதன் பிரத்தியேக அவென்ஜர்ஸ் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வந்தது, அனைவருக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷன் தோற்றம் பிடித்திருந்தது. ஆனால் அதன் விலை 44,999 க்கு சென்றுவிட்டது. இதுவரை ஒன்பிளஸ் 6 இன் அதிக விலை ஸ்மார்ட்போன் ஆக அவென்ஜர்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்பொழுது ஹாடோரோ நிறுவனம் உலகின் விலை உயர்ந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட் போன் ஐ விற்பனை செய்யவிருக்கிறது.

ஏரோ கார்பன் பைபர் கிளாஸ் ஒன்பிளஸ் 6

ஏரோ கார்பன் பைபர் கிளாஸ் ஒன்பிளஸ் 6

பிரெஞ்சு நிறுவனமான ஹாடோரோ நிறுவனம் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட பிரத்தியேக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட் போன் ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பிரத்தியேக ஒன்பிளஸ் 6 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் உலகில் உள்ள அனைத்து ஒன்பிளஸ் 6 ரசிகர்களுக்காவும் திறப்பு விற்பனை அறிவிப்பை அறிவித்திருக்கிறது. இதன் வெளி புறத்தோற்றம் ஏரோ கார்பன் மற்றும் பைபர் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் புகழ் பெற்ற டமாஸ்கஸ் ஸ்டீல்(Damascus Steel) ஸ்டைல் நெளிந்த கோடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

 சஃபையர் கிளாஸ்

சஃபையர் கிளாஸ்

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இன் சிறப்பம்சம் என்னவென்றால் பின்புறத்தில் இருக்கும் ஒன்பிளஸ் லோகோ சஃபையர் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ இருட்டில் மின்னும் விதம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹாடோரோ ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 2,700 யுரோஸ் க்கு விற்பனையைச் செய்யப்படும் என்று ஹாடோரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெயரும் பொறிக்கப்பட்ட ஒன்பிளஸ் 6

பெயரும் பொறிக்கப்பட்ட ஒன்பிளஸ் 6

இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.2,27,000 ஹாடோரோ தலத்தில் விற்பனை செய்கிறது, இத்துடன் கூடுதலாக நீங்கள் வாங்கும் ஹாடோரோ ஒன்பிளஸ் 6 இல் உங்களின் பெயரும் பொறிக்கப்பட்டு டெலிவரி 10 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
This customized limited edition OnePlus 6 costs 2,700 Euros and looks brilliant : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X