அடிச்சான் பாரு Samsung.. திடீர் விலைக்குறைப்பு.. 6.5-இன்ச் டிஸ்பிளே, 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?
6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் கிடைப்பதே மிகவு அரிது. அதிலும் அந்த ஸ்மார்ட்போன் மீது திடீர் விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டால்.. சொல்லவே வேண்டாம்!
புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட அனைவரின் கவனமும் அந்த ஸ்மார்ட்போன் மீதுதான் இருக்கும். அந்த ஸ்மார்ட்போன் - சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் (Samsung Galaxy A04s) மாடலாகும். பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது இன்னும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு ரூ.13,499 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. விலைக்குறைப்பை தவிர்த்து மேலும் சில சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டு வழியாக சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ்-ஐ வாங்கினால ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். சாம்சங் ஷாப் ஆப் வலுயாக வாங்கினால் ரூ.2000 வரையிலான தள்ளுபடியை பெறலாம் மற்றும் சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 10% கேஷ்பேக்கும் கிடைக்கும்.
அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஆனது 720 x 1560 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவ கொண்டுள்ளது. இதன் இன்ஃபினிட்டி வி-டிஸ்பிளேவானது (Infinity V-Display) மென்மையான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 (Octa-core Exynos 850) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 64ஜிபி-ஐ கொண்டுள்ளது. கூடவே மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 1டிபி வரை ஸ்டோரேஜை நீடித்துக்கொள்ளும் விருப்பமும் உள்ளது.
ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சாம்சங்கின் சொந்த ஒன் யுஐ 4.1 (One UI 4.1) உடன் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் விலையை மீறிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது என்றே கூறலாம்
இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன், எஃப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 எம்பி மெயின் கேமராவும் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால் தேவைகளை பூர்த்தி செய்ய 5எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஆனது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.12000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் இதை விட சிறப்பான அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது: காப்பர் (Copper), பிளாக் (Black) மற்றும் க்ரீன் (Green).


Click it and Unblock the Notifications








