Home
Mobile

உனக்கும் வேணா.. எனக்கும் வேணா.. ரூ.5000 திடீர் விலைக்குறைப்பை பெற்ற OPPO-வின் பெஸ்ட் கேமரா போன்!

ஒரு ஸ்மார்ட்போனின் விலையை ரூ.1,000 அல்லது ரூ.2,000 என்கிற அளவில் குறைத்தால்.. வாடிக்கையாளர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். அதற்காக ரூ.10,000 - ரூ.15,000 என்கிற அளவுக்கு விலை குறைத்தால், குறிப்பிட்ட மொபைல் நிறுவனம் தனது தலையில் துண்டை போட்டு கொள்ள வேண்டியது தான்!

அதனால் தான் சீன மொபைல் பிராண்ட் ஆன ஒப்போ, "உங்களுக்கும் வேண்டாம்.. எங்களுக்கும் வேண்டாம்" என்கிற பாணியில்.. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி (Oppo Reno 7 Pro 5G) ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்துள்ளது.

ரூ.5000 திடீர் விலைக்குறைப்பை பெற்ற OPPO-வின் பெஸ்ட் கேமரா போன்!

ஒப்போ இந்தியா (Oppo India) வலைத்தளத்தில் பிரதிபலிக்கும் ஒப்போ ரெனோ 7 ப்ரோவின் புதிய விலை நிர்ணயம் என்ன? இதன் பழைய விலை என்ன? ஒப்போ பிராண்டின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் பிரபலமான மிட்-ரேன்ஜ் மாடல் என்று கூறுமளவிற்கு இதில் அப்படி ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:

ஒப்போ ரெனோ 7 ப்ரோவின் பழைய விலை VS புதிய விலை: கடந்த ஆண்டு அறிமுகமாகும் போது, ஒப்போ ரெனோ 7 ப்ரோவின் இந்திய விலை ரூ.39,999 என்று நிர்ணயம் செய்யபட்டது. தற்போது ரூ.5000 என்கிற விலைக் குறைப்புக்குப் பிறகு இது ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விலைக்குறைப்புடன் சேர்த்து ஒப்போ ரெனோ 7 ப்ரோ மீது சில வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.2,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக இந்த போனின் விலையை அதிகபட்சமாக ரூ.7000 வரை குறைக்க முடியும்!

ஒப்போ ரெனோ 7 ப்ரோவின் அம்சங்கள்: ஸ்டார்ட்ரெயில்ஸ் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனும் அடக்கம்.

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200-மேக்ஸ் சிப்செட் உடன் வரும் ஒப்போ ரெமோ 7 ப்ரோவானது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த கலர்ஓஎஸ் (ColorOS) லேயரை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் எஃப்/1.8 லென்ஸ் உடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 மெயின் கேமரா + எஃப்/2.2 லென்ஸ் உடனான 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + எஃப்/2.4 லென்ஸ் உடனான 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது.

முன்பக்கத்தில், வீடியோ கால்கள் மற்றும் செல்பீக்களுக்கான பொறுப்பை 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 கேமரா பார்த்து கொள்கிறது. கடைசியாக ஒப்போ ரெனோ 7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 4,500mAh பேட்டரி உள்ளது. அது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (Fast Charging Support) வருகிறது.

நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான், ஒப்போ தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான (Foldable Smartphone) ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்பை (Oppo Find N2 Flip) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மடங்கக்கூடிய வடிவமைப்பை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.89,990 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
This Best Camera Phone Received Rs 5000 Price Cut in India Check Oppo Reno 7 Pro New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X