ஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.? எதற்கு.?

கொஞ்சம் கம்மியான விலைக்கு, செகென்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்னு கிடைக்குமா.?

|

கொஞ்சம் கம்மியான விலைக்கு, செகென்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்னு கிடைக்குமா.? என்று அலையும் நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் டெய்ஸி திட்டத்தை பற்றி கேட்ட உடனேயே கொஞ்சம் தூக்கி வாரிதான் போடும்.

இந்த டெய்ஸி திட்டத்தின் கீழ், ஒரு ரோபோட் உதவுடன் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 200 யூனிட்கள் (200 ஐபோன்கள்) என்கிற விகிதத்தில் ஐபோன்கள் உடைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்பிளின் டெய்ஸி திட்டம் என்றால் என்ன.? ஆப்பிளுக்கு ஏன் இந்தகொலைவெறி.? ஏன் அவைகள் உடைக்கப்படுகிறது.?

ஒரு மணிநேரத்திற்கு 200 ஐபோன்கள் துவம்சம்.!

ஒரு மணிநேரத்திற்கு 200 ஐபோன்கள் துவம்சம்.!

"உடைத்தல்" என்ற உடனேயே, ஆப்பிள் ஐபோன்கள் சுக்குநூறாக, சல்லி சல்லியாக உடைக்கப்படுகிறது என்கிற உங்களது கற்பனை குதிரையை பறக்க விட வேண்டாம். டெய்ஸி திட்டத்தின் கீழ் இயங்கும் ரோபோட் ஆனது ஒரு ஐபோனின் அடிப்படை கூறுகளை தனியாக பிரிக்கும் நோக்கத்தில் தான் உடைத்தல் பணியை நிகழ்த்துகிறது. அதாவது மறுசுழற்சி திட்டத்தின் கீழ் தான் ஒரு மணிநேரத்திற்கு 200 ஐபோன்கள் துவம்சம் செய்யப்படுகின்றன.

வெறும் 11 வினாடிகளில் கழட்டி பிரிக்கக்கூடிய திறன்.!

வெறும் 11 வினாடிகளில் கழட்டி பிரிக்கக்கூடிய திறன்.!

இந்த மறுசுழற்சி திட்டம் ஒன்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய யோசனை அல்ல, கடந்த 2016 ஆம் ஆண்டில், ஐபோன்களை மறுசுழற்சி செய்வதில் ஆப்பிள் நிறுவனம் சந்தித்த சிக்கல்களையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ், 29 கைகள் கொண்ட லியாம் எனும் ஒரு ரோபோட்டை அறிமுகம் செய்தது. லியான் ரோபோட் ஆனது ஒரு ஐபோன் 6-ஐ ன் வெறும் 11 வினாடிகளில் கழட்டி பிரிக்கக்கூடிய திறனை கொண்டிருந்தது.

"பிரித்து எடுக்கும்" பணிகள் நிறுத்தப்பட்டது.!

பின்னர் பல காரணங்களின் விளைவாக, லியாம் ரோபோட் செய்து வந்த "பிரித்து எடுக்கும்" பணிகள் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆப்பிள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அந்த ரோபோவின் பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு புதிய திட்டங்களை தன் என்ஜினீயர்கள் உருவாக்கம் செய்வார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆரம்பத்தில் மணிக்கு 350 ஐபோன்களை பிரிக்கும் திறன்.!

ஆரம்பத்தில் மணிக்கு 350 ஐபோன்களை பிரிக்கும் திறன்.!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி (எர்த் டே) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த டெய்ஸி திட்டமானது, ஆரம்பத்தில் மணிக்கு 350 ஐபோன்களை பிரிக்கும் திறன் கொண்டதாக தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, லியாம் மணிக்கு 200 ஐபோன்களை பிரித்து எடுக்கிறது. எண்ணிக்கை குறைந்து விட்டதால் லியாம் ரோபோட்டின் திறனும் குறைந்து விட்டது என்று அர்த்தம் கொள்ள கூடாது.

ஐபோன் எக்ஸ் தவிர.!

ஐபோன் எக்ஸ் தவிர.!

இந்த ரோபோட் மொத்தம் ஒன்பது ஐபோன் பதிப்புகளை பிரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது (இதில் ஐபோன் எக்ஸ் விதிவிலக்காகும்). மிகவும் திறமையான முறையில் ஒவ்வொரு ஐபோன் கூறுகளையும், பாகங்களையும் பிரித்தெடுப்பதில் லியாமிற்கு நிகர் லியாம் தான். பாரம்பரிய வழிமுறைகளை மீட்டெடுக்கவோ அல்லது மீட்கவோ முடியாது.

ஆப்பிள் செலவினங்களையும் குறைக்க உதவுகிறது.!

ஆப்பிள் செலவினங்களையும் குறைக்க உதவுகிறது.!

இவ்வகை மறுசுழற்சி வேலைகளானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது மட்டுமல்லாமல், சில கூறுகளை உற்பத்தி செய்வதற்கான ஆப்பிள் செலவினங்களையும் குறைக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, கோபால்ட் லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிப்பது என்பது மிகவும் அவசியமானது ஆகும். மின்சார கார்களின் அதிகரித்து வரும் தேவைகாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே உலோகத்தின் விலை கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அந்த செலவை ஆப்பிள் நிறுவனத்தின் மறுசுழற்சி திட்டம் குறைக்கும்.

மறுசுழற்சிக்கு ஐபோன்கள் வரவில்லை என்றால்.?

மறுசுழற்சிக்கு ஐபோன்கள் வரவில்லை என்றால்.?

என்னதான் மணிக்கு 200 ஐபோன்களை காலி செய்தாலும் கூட, காலி செய்வதற்கு, அதாவது மறுசுழற்சிக்கு ஐபோன்கள் வரவில்லை என்றால் ஆப்பிளின் நிலை அய்யோ பாவம் தான். இந்த சிக்கலை, ஆப்பிள் அதன் GiveBack திட்டத்தின் (அவுட் டேட்டட் அதாவது காலாவதியான ஐபோன்களை திரும்ப கொடுத்தால், அதற்கு ஈடாக பரிசு அட்டைகளை வழங்கும் ஒரு திட்டம்) வழியாக சரி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
This Apple Robot Destroys 200 iPhones Per Hour. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X