திடீர் விலைக்குறைப்பு! இப்போது இந்த 6000mAh பேட்டரி கொண்ட சாம்சங் போனின் விலை இன்னும் கம்மி!
பெரிய பேட்டரி கேப்பாசிட்டி உடன் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவர்கள், சாம்சங் அறிவித்துள்ள இந்த திடீர் விலைக்குறைப்பை சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம். சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஃப்13 மாடலின் விலையை திடீரென குறைத்துள்ளது.
இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், சாம்சங் கேலக்ஸி எஃப்13 (Samsung Galaxy F13) ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகமானது மற்றும் அந்த இரண்டுமே தற்போது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஃப்13 - பழைய விலை VS புதிய விலை
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி + 64ஜிபி மற்றும் 4ஜிபி +128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. அவைகளின் அசல் விலை முறையே ரூ.11,999 மற்றும் ரூ.12,999 ஆகும். தற்போது ரூ.1,000 விலைக்குறைப்புக்கு பிறகு 64ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கும், 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நைட்ஸ்கி கிரீன், வாட்டர்ஃபால் ப்ளூ மற்றும் சன்ரைஸ் காப்பர் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் கீழ் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஃப்13 மீது ரூ.1000 வங்கி சலுகையும் கிடைக்கிறது. இந்த உடனடி தள்ளுபடியை பெற நீங்கள் எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டும்.
சாம்சங் கேலக்ஸி எஃப்13 அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனானது 1080 x 2408 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் பாதுகாக்கப்படுகிறது.
பட்ஜெட் ஸ்மார்ட்போனான இது சாம்சங்கின் சொந்த ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது; இதில் 1டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இது குவாட்-ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது, அதில் எப்/1.8 அபெர்ச்சர் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் உள்ளது; முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயரான ஒன் யுஐ (One UI) வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இந்த பேட்டரி 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெறுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப்13 - நிறைகள் மற்றும் குறைகள்
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனில் உள்ள நிறைகளை பற்றி பேசும் போது. இது நல்ல வடிவமைப்பை பெற்றுள்ளது மற்றும் விலையை மீறிய தரமான டிஸ்பிளேவை பேக் செய்கிறது. கூடவே இது சிறந்த பேட்டரி லைஃப்பையும் வழங்குகிறது. குறைகளை பற்றி பேசும் போது, செயல்திறனில் மேம்பாடு தேவை மற்றும் இதன் கேமராக்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்!


Click it and Unblock the Notifications