ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

|

இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஒரு மொபைல் போன் பிராண்ட், தனது 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றிற்கு ஏர்டெல் 5ஜி (Airtel 5G) மற்றும் ஜியோ 5ஜி (Jio 5G) ஆகிய இரண்டிற்குமான ஆதரவையும் அறிவித்துள்ளது.

அதென்ன நிறுவனம்? ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5ஜி-க்கான சப்போர்ட்டை பெறவுள்ள அந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சீனா.. தென் கொரியா.. அமெரிக்கா!

சீனா.. தென் கொரியா.. அமெரிக்கா!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், தென் கொரிய பிராண்ட் ஆன சாம்சங், அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் போன்ற பிரபலமான மொபைல் போன் தாயாரிப்பாளர்களே, தத்தம் மொபைல் போன்களுக்கு 5ஜி-க்கான ஆதரவை முழுமையாக வழங்கி முடிக்காத நிலைப்பாட்டில்..

இந்திய மொபைல் பிராண்ட் ஒன்று தனது 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்கான ஆதரவையும் அறிவித்துள்ளது!

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

அதென்ன நிறுவனம்.. என்ன மாடல்?

அதென்ன நிறுவனம்.. என்ன மாடல்?

டூயல் சிம் (Dual SIM) மற்றும் டூயல் நெட்வொர்க் ஆக்ஸலரேஷனை (Dual Network Acceleration) கொண்ட லாவா (Lava) நிறுவனத்தின் அக்னி 5ஜி (Agni 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான் நாம் இங்கே பேசுகிறோம்!

லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, அக்னி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஒரு புதிய சாப்ட்வேர் அப்டேட் (Software Update) கிடைக்கும். அந்த அப்டேட் வழியாக அக்னி 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவின் 2 முக்கியமான 5ஜி நெட்வொர்க்களுக்குமான ஆதரவும் கிடைக்கும்.

அதாவது ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்குமான ஆதரவும் கிடைக்கும்!

முதலில் FOTA அப்டேட்.. பின்னர் 5G சப்போர்ட்!

முதலில் FOTA அப்டேட்.. பின்னர் 5G சப்போர்ட்!

லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனான அக்னி 5ஜி, வரும் நாட்களில் ஃபோட்டா அப்டேட்டை (FOTA update) பெற தொடங்கும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது!

குறிப்பிட்ட அப்டேட்டின் சைஸ் என்ன, அந்த அப்டேட் உடன் ஏதேனும் பக் பிக்சஸ் (bug fixes) வருமா? சிஸ்டம் பெர்ஃபார்மென்ஸ் பிக்சஸ் (system performance fixes) வருமா? அல்லது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வருமா? போன்ற கேள்விகளுக்கான எந்த பதில்களும் இல்லை!

ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!

நீங்களொரு ஏர்டெல் பயனர் என்றால்?

நீங்களொரு ஏர்டெல் பயனர் என்றால்?

5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நகரங்களில் உள்ள ஏர்டெல் + லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள் குறிப்பிட்ட FOTA அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின்னர், Airtel 5G Plus-ஐ பயன்படுத்தத் தொடங்கலாம்!

அதாவது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, நாக்பூர், வாரணாசி, சிலிகுரி மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ளவர்கள் ஏர்டெல் 5ஜி-ஐ பயன்படுத்தலாம்.

ஒருவேளை நீங்களொரு ஜியோ பயனர் என்றால்?

ஒருவேளை நீங்களொரு ஜியோ பயனர் என்றால்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5G சேவைகளை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் சோதித்து வருகிறது.

மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் உள்ள அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள், குறிப்பிட்ட FOTA அப்டேட் வந்ததும் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

பாவப்பட்ட வோடாபோன் ஐடியா யூசர்கள்!

பாவப்பட்ட வோடாபோன் ஐடியா யூசர்கள்!

வோடாபோன் ஐடியா, 5ஜி அறிமுகம் குறித்த தனது திட்டங்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதால், அக்கினி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்போது விஐ 5ஜி-க்கான ஆதரவை பெறும் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை!

பேசி முடிவு செய்த வேகத்தில் அறிவிப்பு!

பேசி முடிவு செய்த வேகத்தில் அறிவிப்பு!

முன்கூட்டியே 5ஜி சேவைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வெவ்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் இன்டர்நெட் சர்வீஸ் வழங்குநர்களுடன் (ISP Internet Service Providers) பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.

அந்த கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் முடிவடைந்த சில நாட்களுக்கு பிறகு, லாவா நிறுவனத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை:

அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை:

லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.17,999 ஆகும். இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை நிர்ணயம் ஆகும்.

ப்ளூ கலர் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கவும் முடியும்!

என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- 6.78-இன்ச் FHD+ டிஸ்ப்ளே
- பஞ்ச்-ஹோல் டிசைன்
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்

- மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர்
- ப்ளோட்வேர் இல்லாத ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- வருங்காலத்தில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அப்டேட்டும் கிடைக்கும்

- 64 மெகாபிக்சல் குவாட் கேமரா செட்டப்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5000mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்.

Photo Courtesy: Lava

Best Mobiles in India

English summary
This 5G smartphone from Lava to support both airtel 5G and jio 5G via new software update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X