இரும்பைவிட உறுதி.. மிலிட்டரி தரம்.. மாஸ் கிளப்பிய ThinkPhone 25 போன்.. Motorola-ஆ மொபைலா இது? விலை என்ன?
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அதன் தின்க்போன் (ThinkPhone) வரிசையில், புதிதாக தின்க்போன் 25 பை மோட்டோரோலா (ThinkPhone 25 by Motorola) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களுடன் விலை குறைந்த மாடலாக இந்த போனை மோட்டோரோலா நிறுவனம் அதன் தின்க்போன் வரிசையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பே இந்த போன் இப்போது மிலிட்டரி கிரேட் தரத்தில் (miltary-grade durability) வருகிறது.
இந்த புதிய தின்க்போன் 25 (ThinkPhone 25) ஸ்மார்ட்போன் சாதனம் மிலிட்டரி கிரேட் உறுதியுடன் (miltary-grade durability) MIL-810H சான்று தரம்பெற்றது. இது IP68 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம் வீகன் லெதர் உடன் வருகிறது. ஆனால், தின்க்போன் 25 அராமிட் பைஃபர் பேக் (Aramid fiber) பேனல் உடன் வருகிறது.

தின்க்போன் 25 பை மோட்டோரோலா (ThinkPhone 25 by Motorola):
இந்த அராமிட் பைஃபர் இரும்பை விட பல மடங்கு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 5 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் (Android OS upgrades) மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட் உடன் வருகிறது. இது 2029 வரை தடையில்லாத அப்டேட்டை பெரும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லெனோவா டேப்லெட் மற்றும் லேப்டாப் உடன் இணக்கமானது.
தின்க்போன் 25 பை மோட்டோரோலா சிறப்பம்சம் (ThinkPhone 25 by Motorola Specifications):
இது 6.4' இன்ச் அளவு கொண்ட 2670 x 1220 பிக்சல் உடன் கூடிய 1.5K pOLED 120Hz LTPO டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே சாதனம் 3000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் (Corning Gorilla Glass 7i protection) வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் உடன் வருகிறது.
தின்க்போன் 25 பை மோட்டோரோலா கேமரா (ThinkPhone 25 by Motorola Camera):
MediaTek Dimensity 7300 சிப்செட் 8GB LPDDR4X ரேம் (RAM), 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் (storage) உடன் வருகிறது. இதன் கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில், இது 50MP மெயின் கேமரா (main camera) உடன் OIS ஆதரவை கொண்டுள்ளது. இத்துடன் 13MP 120° அல்ட்ரா வைட் கேமரா (ultra-wide camera), macro option, 10MP 3x டெலிபோட்டோ (Telephoto camera) உடன் ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது.
தின்க்போன் 25 பை மோட்டோரோலா விலை (ThinkPhone 25 by Motorola Price):
முன்பக்கத்தில், இது 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம் கார்டு உடன் வருகிறது. இது 4310mAh பேட்டரி அம்சத்துடன் 68W டர்போ சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இதில் 15W வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மதிப்பில் ரூ. 41,850 விலையில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த போன் நவம்பர் மாதம் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








