இன்னும் ஐபோன் 7 வரவில்லை, அதற்குள் ஐபோன் 8??

By Meganathan
|

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை வைத்து ஆப்பிள் நிறுவனம் நல்ல வியாபாரம் செய்து வருகின்றது. சாம்சங் கருவிகளின் சர்ச்சை காரணமாக ஆப்பிள் வியாபாரம் அதிகரித்திருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் கருவிகள் அடுத்த வாரம் தான் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்நிலையில் ஐபோன் 8 கருவியின் தயாரிப்பு பணிகள் துவங்கி விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியாக ஐபோன் 8 கருவி குறித்த சில தகவல்களை இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

இஸ்ரேல்

இஸ்ரேல்

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 8 கருவிகளை இஸ்ரேலில் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கென அந்நிறுவனம் இஸ்ரேலின் ஹெர்ஸிலியா பகுதியில் அமைந்திருக்கும் ஆப்பிள் ஆய்வு மற்றும் தயாரிப்பு கூடத்தினை பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. இங்கு வன்பொருள் பகுதிகளான சிப்ஸ், ஸ்டோரேஜ், கேமரா மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் போன்றவற்றை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கிளாஸ் பாடி எட்ஜ்-டூ-எட்ஜ் டிசைன்

கிளாஸ் பாடி எட்ஜ்-டூ-எட்ஜ் டிசைன்

ஐபோன் 8 கருவியானது முற்றிலும் கிளாஸ் பாடி மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, கேமரா மற்றும் டச் ஐடி போன்றவற்றைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது ஐபோன் 8 கருவியினை ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எட்ஜ்-டூ-எட்ஜ் டிசைன் கொண்ட கருவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

ஐபோன் 7 பிளஸ் கருவியில் மேம்படுத்தப்பட்ட கேமரா வழங்கப்பட்டுள்ளதைப் போன்று ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 கருவியிலும் கேமராவினை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகவலை ஆப்பிள் ஊழியர் ஒருவர் உறுதி செய்திருந்தாலும் இது குறித்த தகவல்களை வழங்க அவர் மறுத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

இம்முறை ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன் ஜாக்களை நீக்கி இருப்பதைப் போல் அடுத்த கருவியில் ஹோம் பட்டனை நீக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இம்முறை வெளியிடப்பட்டிருக்கும் ஐபோன் கருவிகளில் ஹோம் பட்டனில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதால், அடுத்த ஆப்பிள் ஐபோன் கருவியில் அதிகளவு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

ஏற்கனவே பல்வேறு ஆண்ட்ராய்டு கருவிகளில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐபோன் 8 கருவியில் ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தினை வழங்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Things you should know about iPhone 8 already in production Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X