Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்6 செய்யும் இதனை ஐபோன்6 செய்ய முடியாது.

ஐபோன் 6 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ். இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் நிறுவனத்தை வேறு பாதைக்கு மாற்றி பயனிக்க வழிவகுத்திருக்கின்றது.

புதிய சிறப்பம்சங்களை மேம்படுத்துவதற்கு பதிலாக இம்முறை முக்கிய பாகங்களையை மாற்றியமைத்திருக்கின்றது. மேலும் வடிவமைப்பு, தரம் மற்றும் கைரேகை ஸ்கேனர் என பட்டியல் நீள்கின்றது.

சாம்சங் நிறுவனம் பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன்களில் சேர்க்கவில்லை என்றாலும் ஐபோன்களால் செய்ய முடியாத சில அம்சங்களை கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் கொண்டுள்ளது, அவை என்ன என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 கான்டாக்ட்

கான்டாக்ட்

கேலக்ஸி எஸ்6 எட்ஜில் எந்த ஒரு கான்டாக்ட்களுக்கும் நிறத்தினை அசைன் செய்து கொள்ள முடியும், அவ்வாறு அசைன் செய்த நபர் அழைக்கும் போது போனின் ஸ்கிரீனில் அசைன் செய்யப்பட்ட நிறம் தெரியும்.

கேமரா

கேமரா

கேலக்ஸி எஸ் 6 மற்றும் கேல்க்ஸி எஸ் 6 எட்ஜ் போன்களில் ஹோம் பட்டனை இரு முறை தட்டினால் கேமரா திறந்து விடும். ஆனால் ஐபோன்களில் கேமரா செயலியை திறக்க வேண்டும் அல்லது லாக் ஸ்கிரீனில் இருக்கும் கேமரா பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

போகஸ்

போகஸ்

கேலக்ஸி எஸ் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் போது எடுக்கப்படும் பொருள் நகர்ந்தாலும் போகஸ் தவறாது, ஐபோன் கேமராவால் இது முடியாது.

 சார்ஜ்

சார்ஜ்

கேலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் போன்களில் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும், சாம்சங் நிறுவனம் இது குறித்து கூறும் போது 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. ஐபோனில் சீக்கிரம் சார்ஜ் ஆகும் அம்சம் இல்லை என்று அனைவரும் அறிந்ததே.

 நேரம்

நேரம்

கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் போன்களில் ஸ்கிரீன் ஆஃப் செய்திருந்தாலும் நேரத்தை பார்க்க முடியும், ஆனால் ஐபோன்களில் இது சாத்தியம் கிடையாது.

செயலி

செயலி

கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் போன்களில் ஒரே நேரத்தில் பல செயலிகளை ஹோம் ஸ்கிரீனில் பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் இது சாத்தியம் கிடையைது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

கலேக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்களில் ப்ரெத்யேக பேட் ஒன்றை பயன்படுத்தி வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும், ஆனால் ஐபோனில் இப்போதைக்கு வயர்லெஸ் சார்ஜிங் கிடையைது.

ஸ்மார்ட் மேனேஜர் ஆப்

ஸ்மார்ட் மேனேஜர் ஆப்

இரு சாம்சங் கருவிகளும் ஸ்மார்ட் மேனேஜர் ஆப் கொண்டிருப்பதால் தேவையில்லாத செயலிகளை ஒரே பட்டனில் அழித்து விடும்.

இதய துடிப்பு

இதய துடிப்பு

இரு கருவிகளிலும் இயத துடிப்பு சென்சார் இருப்பதால் ஹார்ட் ரேட்களை தெரிந்து கொள்ள முடியும், ஆனால் ஐபோன்களில் இதனை அறிந்து கொள்ள தனியாக ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

என்எப்சி

என்எப்சி

இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் சாம்சங் பே முறையை என்எப்சி டெர்மினல் இல்லாமலும் பயன்படுத்தலாம், ஆனால் ஐபோனில் இருக்கும் ஆப்பிள் பே முறையை பின்பற்றி என்எப்சி டெர்மினல் மிகவும் அவசியமானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Things Samsung Galaxy S6 can do, iPhone 6 can’t. Check out here interesting things Samsung Galaxy S6 can do, iPhone 6 can’t. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X