இந்தியாவில் வெளியான ஒன் ப்ளஸ் 3, முக்கிய அம்சங்கள்.!!

Written By:

அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று ஒன் ப்ளஸ் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் விலை உயர்ந்த கருவிகளில் வழங்கப்படும் அம்சங்களைக் கொண்டுள்ள ஒன் ப்ளஸ் 3 ரூ.27,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இந்தக் கருவி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

புதிதாய் வெளியான ஒன் ப்ளஸ் 3 கருவியின் முக்கிய அம்சங்களை ஸ்லைடர்களில் விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு

01

அலுமினியம் மெட்டல் பாடி வடிவமைப்பு, கிராஃபைட் மற்றும் மென்மையான தங்க நிறங்களில் கிடைக்கின்றது. ஒன் ப்ளஸ் ஒன் மற்றும் ஒன் ப்ளஸ் 2 கருவிகளைப் போன்று இல்லாமல் இதன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பட்டன்

02

எனினும் கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டன் போன்றவை முந்தைய கருவியை வழங்கப்பட்டதைப் போன்ற காட்சியளிக்கின்றது. கருவியின் கீழ் பகுதியில் மூன்று ஹார்டுவேர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிஸ்ப்ளே

03

ஒன் ப்ளஸ் 3 கருவியில் FHD தரம் கொண்ட 5.5 இன்ச் டிஸ்ப்ளே, மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு இதன் டிஸ்ப்ளே AMOLED என்பதால் டிஸ்ப்ளே தரம் அதிகமாகவே இருக்கும்.

பிராசஸர்

04

ஒன் ப்ளஸ் 3 கருவியானது ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் மற்றும் அட்ரினோ 530GPU கொண்டுள்ளது. இது குவால்காம் நிறுவனத்தின் அதிக சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். இதனால் இந்தக் கருவியில் மல்டி டாஸ்கிங் செய்வதில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது.

மெமரி

05

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளதால் கருவியின் வேகம் சீராக இருக்கும். இந்தக் கருவியின் மெமரியை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு திறன் வழங்கப்படாதது, நம்மை ஏமாற்றம் அடையச் செய்கின்றது.

கேமரா

06

ஒன் ப்ளஸ் 3 கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், மற்றும் 4கே வீடியோ வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. சூப்பராகச் செல்பீ எடுத்திட 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

07

ஒன் ப்ளஸ் 3 கருவியானது 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு பேட்டரி சார்ஜிங் பிரச்சனைகளைத் தீர்க்க குவிக் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருவியை 30 நிமிடங்களில் சுமார் 63 சதவீதம் சார்ஜ் செய்திட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

08

தற்சமயம் சந்தையில் வெளியாகும் கருவிகளில் வழங்கப்படுவதைப் போன்றே ஒன் ப்ளஸ் 3 கருவியிலும் யுஎஸ்பி டைப்-சி கனெக்விட்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தரவுகளை வேகமாகப் பரிமாற்றம் செய்வதோடு சார்ஜிங் வேகமாகச் செய்யும் இது உதவும். இதோடு டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கேமரா ஷார்ட்கட்

09

ஒன் ப்ளஸ் 3 கேமராவினை அதிவேகமாக இயக்க எவ்வித மெனுவில் இருந்தும் ஹோம் பட்டனை இரு முறை டேப் செய்தால் போதுமானது.

நோட்டிபிகேஷன்

10

முன்னதாக மோட்டோரோலா கருவிகளில் வழங்கப்பட்ட ஜெஸ்டர் வசதி ஒன் ப்ளஸ் 3 கருவிகளிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனைச் செட் செய்து திரையின் மேல் கையை அசைத்தால் நோட்டிபிகேஷன்களைப் பார்க்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Things to Know about OnePlus 3 launched in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot