Home
Mobile

மார்ஷ்மல்லோ அப்டேட் செய்யும் முன், செய்ய வேண்டியவை.!!

By Aruna Saravanan

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ அப்டேட் தற்சமயம் அதிக கருவிகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இது உங்கள் போனுக்கும் கிடைத்தால் அதை பற்றி முன்பே நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

மார்ஷ்மல்லோ அப்டேட் செய்யும் முன், செய்ய வேண்டியவை.!!

புதிய இயங்குதளத்தில் நல்லதும் உள்ளது தீயவையும் உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ'வை உங்கள் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்வதற்கு முன் அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவை உங்கள் போனில் அப்டேட் செய்து கொள்வதற்கு முன் இதை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இது நல்லதாகவும் இருக்கலாம தீயதாகவும் இருக்கலாம். இதை அப்டேட் செய்வதால் உங்கள் போனுக்கு நன்மையா தீமையா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் இதற்கு பதில் ஆண்ட்ராய்டு லாலிபாப்யை அப்டேட் செய்து கொள்ளலாம்.

பேக் அப்

பேக் அப்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவை உங்கள் போனில் அப்டேட் செய்வதற்கு முன் உங்கள் போனில் உள்ள எல்லா கோப்புகளையும் பேக் அப் செய்து கொள்வது நல்லது. போட்டோ, வீடியோ மற்றும் மற்ற ஆப்ஸ்களின் பேக் அப்பையும் எடுத்து கொண்டு பின்பு ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவை அப்டேட் செய்யவும்.

தேவையற்றதை நீக்கவும்

தேவையற்றதை நீக்கவும்

உங்கள் போனின் ஜன்க்'ஐ சுத்தம் செய்யவும். தேவையற்ற கோப்புகள், பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நீக்கிவிடுங்கள். அவை குப்பைக்கு செல்ல வேண்டியவை. ஆகவே அவற்றை டெலீட் செய்து விடுவது நல்லது.

முழு சார்ஜ்

முழு சார்ஜ்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவை அப்கிரேட் செய்வதற்கு முன் உங்கள் போனை சார்ஜ் செய்ய வேண்டும். அதுவும் 80 சதவிகித சார்ஜ் தேவை. அப்கிரேட் செய்து கொண்டிருக்கும் போதும் சார்ஜ் செய்யலாம். இதனால் அப்கிரேட் ஆனவுடன் போனை உடனடியாக பயன்படுத்த முடியும்.

விமர்சனம் தேவை

விமர்சனம் தேவை

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவை அப்கிரேட் செய்வதற்கு முன் இதை பற்றிய கருத்துகணிப்பை ஆன்லைனில் படித்து தெளிவு அடையுங்கள். இதில் இதை பற்றிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள முடியும். சிலர் பழைய பயன்பாட்டான லாலிபாப் வெர்ஷனை தேர்ந்தெடுக்கலாம் மற்றும் சிலர் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவை தேர்ந்தெடுக்கலாம்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

சில ஆப்ஸ்கள் மார்ஷ்மல்லோ இயங்குதளத்தில் பொருந்துவதில்லை. அவை எவை என கண்டுபிடிக்கவும். அதை அறியாமல் நீங்கள் இதை அப்டேட் செய்தால் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ் செயல்படாமல் போகலாம். ஆகவே கவனம் தேவை.

ஆப் அனுமதி

ஆப் அனுமதி

உங்கள் அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் பார்க்க லாக் இன் செய்யும் போது முழுவதுமாக மார்ஷ்மல்லோவை authorize செய்ய முடியும். ஆகையால் உங்கள் எல்லா கடவுச்சொற்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஐடி துறை

ஐடி துறை

நீங்கள் அலுவல் நிமித்தம் உங்கள் போனை பயன்படுத்தி கொண்டிருந்தால் ஐடி துறையுடன் கலந்து உங்கள் போன் புதிய ஆண்ட்ராய்டுடன் செயல்படுமா என்பதை ஆலோசியுங்கள். மார்ஷ்மல்லோவுடன் இணைந்து செயல் புரியும் அப்லிகேஷன்களை ஐடி துறை உங்களுக்கு வழங்கும்.

மார்ஷ்மல்லோ ஆப்ஸ் அப்டேட்ஸ்

மார்ஷ்மல்லோ ஆப்ஸ் அப்டேட்ஸ்

மார்ஷ்மல்லோவில் ஆப்ஸ் அப்டேட்ஸ் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சில புதிய அப்டேட்ஸ்கள் பழைய அம்சங்களை சப்போர்ட் செய்வதில்லை. ஆகையால் பிரச்சனை உள்ள ஆப்ஸ்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மார்ஷ்மல்லோ

மார்ஷ்மல்லோ

மார்ஷ்மல்லோ உங்களுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதில் தெளிவு அடையுங்கள். இல்லையென்றால் இதை நீக்கி உங்கள் பழைய வெர்ஷனை அப்டேட் செய்து கொள்வது புத்திசாலித்தனம்.

Best Mobiles in India

English summary
Things To Do Before Updating To Android Marshmallow Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X