Vivo, iQoo பயனர்களுக்கு குட் நியூஸ்: இந்த மாடல் இருந்தா உடனே இதை செய்யவும்!
சமீபத்தில் அறிமுகமான பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் Android 13 அப்டேட்டை படிப்படியாக பெறத் தொடங்கி இருக்கின்றன. அதன்படி தற்போது இந்தியாவில் vivo நிறுவனத்தின் ஒரு சமீபத்திய மாடலும், iQOO நிறுவனத்தின் ஒரு சமீபத்திய மாடலும் ஆண்ட்ராய்ட் 13 அப்டேட்டை பெறத் தொடங்கி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்
ஆண்ட்ராய்டு 13 அறிமுகம் குறித்து கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களும் படிப்படியாக ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெற தொடங்கி இருக்கின்றன. இந்த பட்டியலில் தற்போது Vivo மற்றும் iQOO நிறுவனத்தின் தலா ஒரு மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.

Notification பெறுவதற்கு வெளிப்படையான அனுமதி அவசியம்
Android 13 மூலம் பயனர்கள் Notificationகளாக எந்தெந்த அறிவிப்புகளை பெற வேண்டும் என்பதை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளில் Notification பெறுவதற்கு வெளிப்படையான அனுமதி என்பது அவசியம்.
ஸ்பேஷியல் ஆடியோவிற்கான அணுகலையும் ஆண்ட்ராய்ட் 13 வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 13 பயன்படுத்தும் போது, ஹெட்போன்களில் அதிவேகத்துடன் கூடிய உயர்தர ஆடியோவை அனுபவிக்க முடியும். இன்னும் சில அப்டேட்களை ஆண்ட்ராய்டு 13 மூலம் பயனர்கள் பெறலாம்.

இரண்டு மாடல்களின் பெயர்கள்
தற்போது ஆண்ட்ராய்ட் 13ஐ பெறப்போகும் அந்த விவோ மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன் என்னவென்று பார்க்கலாம். விவோவின் Vivo X80 Pro மற்றும் ஐக்யூவின் iQOO 9 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் இந்திய பயனர்கள் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ்-க்கு அப்டேட் செய்யலாம்.
இந்த இரண்டு நிறுவனங்களும் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் இந்த புதுப்பிப்பை அதிகாரிப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vivoவின் புதிய Vivo X80 Pro ஸ்மார்ட்போன் மற்றும் iQOO நிறுவனத்தின் புதிய iQOO 9 Pro மாடல் சாஃப்ட்வேர் புதுப்பிப்புக்கு தயாராக இருக்கிறது.

புதுப்பிப்பு உள்ளதா என்பதை எப்படி சோதிப்பது?
இந்த அப்டேட் ஆனது படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. நீங்கள் இன்னும் புதுப்பிப்பை பெறவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், விரைவில் உங்களுக்கான புதுப்பிப்பு கிடைக்கும். புதுப்புப்பு தொடர்பான நோட்டிபிகேஷன் பெறவில்லை என்றால் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று புதுப்பிப்பு உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளலாம்.

விவோ எக்ஸ்80 ப்ரோ சிறப்பம்சங்கள்
விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது 2கே (1,440x3,200 பிக்சல்கள்) தெளிவுத்திறனுடன் 6.78-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டிருக்கிறது. விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி சாம்சங் ஐசோசெல் கேமரா
விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது 50 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிஎன்வி முதன்மை கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைட் சோனி ஐஎம்எக்ஸ் 598 ஷூட்டர், 12 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 663 சென்சார்கள் மற்றும் 8 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் என குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 32 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி
இந்த ஸ்மார்ட்போனானது வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, என்எஃப்சி மற்றும் இன்ஃப்ராரெட் (ஐஆர்) பிளாஸ்டர் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்கள் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதியோடு இருக்கிறது.
இந்த சாதனம் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்துக்கு என ஐபி68 மதிப்பீடு இதில் இருக்கிறது.

iQOO 9 Pro அம்சங்கள்
iQOO 9 Pro ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது பாண்டா க்ளாஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. டூயல் 50 எம்பி கேமரா மற்றும் ஒரு 16 எம்பி கேமரா என ட்ரிபிளி ரியர் கேமரா அமைப்பு உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications