உலகை மாற்றும் எதிர்காலத்தின் அசாதாரண ஸ்மார்ட்போன்கள்.!

|

இப்போது வரும் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இனி வரும் நாட்களில் வரக் கூடிய ஸ்மார்ட்போன்கள் நமது உலகை அடுத்த லெவலுக்கு
எடுத்து செல்லும். எதிர்காலத்தின் ஸ்மார்ட்போன்கள் வடிவமைப்பு, சிறந்த செயல் திறன் மற்றம் மென்பொருள் மாறுபாடு, கேமரா மாறுபாடு என பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவரும்.

 சாம்சங் கேலக்ஸி ஜீரோ

சாம்சங் நிறுவனம் அன்மையில் கொண்டுவந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து இதுபோன்ற ஸ்மார்ட்போன்களையும், பின்பு வலிமையான ஸ்மார்ட்போன்களையும்(உடையதா வகையில்) உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்ச்சி செய்து வருகிறது. இதுபோன்ற ஸ்மார்ட்போன்கள் வரும்காலத்தில் வெளிவரும் என்பதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் வெளிவரும் ஸ்மார்ட்போன்களைப் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளது அதைப் பற்றி பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஜீரோ

சாம்சங் கேலக்ஸி ஜீரோ

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஜீரோ (Samsung galaxy Zero) ஸ்மார்போன் மாடலை உருவாக்க திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது இன்பினட்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மற்ற ஸமார்ட்போன்களை விட சற்று வித்தயமாக இந்த சாதனம் இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. கண்டிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் விரிவான உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!

எக்ஸிநோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட்

எக்ஸிநோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஜீரோ ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் வடிவமைப்புடன வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு சரியான பேட்டரி வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்என எதிர்பார்க்கப்படுகிறது.

சாங்ஹாங்  எச்2 போன்

சாங்ஹாங் எச்2 போன்

சாங்ஹாங் எச்2 போன் என்று அழைக்கப்படும் இந்த சாதனம் கண்டிப்பாக புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் சில மாதங்களில் அனைத்து சந்தைகளிலும்
வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கேனர்

குறிப்பாக இந்த சாதனத்தின் ஸ்கேனர் வடிவமைப்பில் பல்வேறு புதிய மென்பொருள் வசதிகளை சேர்த்துள்ளது இந்நிறுவனம்,டயட் போன்றவைக்கு இந்த சாதனம் அருமையாக உதவும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் 6-இன்ச் டிஸ்பிளேவுடன்வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பவர் பட்டனில் கூட சில மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்களில் ஆரோக்கியத்திற்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்படுகிறது.

ஐபோன் 11 போல்ட்

ஐபோன் 11 போல்ட்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன் 11 போல்ட் எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 11 போல்ட் எனும் இந்த மடிக்கக்கூடிய சாதனம் ஆனது புதிய வடிவமைப்பு மற்றும் அருமையான மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் 5.8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை பெரும் என கூறப்பட்டுள்ளது.

 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விட

கண்டிப்பாக சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விட ஆப்பிள் நிறுவனம் தரமான மடிக்கக்கூடிய சாதனத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் மூன்று கேமரா அமைப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஎல்சிடி கான்செப்ட்

ஒஎல்சிடி கான்செப்ட்

ஒஎல்சிடி கான்செப்ட் எனப்படும் இதுபோன்ற சாதனங்கள் விரைவில் அனைத்து நிறுவனங்களும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது ஸ்மார்ட்போன் மற்றும் வாட்ச் என இரண்டு ஆதரவுகளையும் கொண்டு வெளிவரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சாதனத்தை கைகளில் ஒட்டிக் கொள்ளலாம்.

 குரல் அழைப்பு

இந்த சாதனத்தில் சமூகவலைதளங்கள், ஆப் போன்றவற்றை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் வீடியோ காலிங், குரல் அழைப்பு என பல்வேறு ஆதரவுகளையும் கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

இசட்டிஇ HAWKEYE

இசட்டிஇ HAWKEYE

இசட்டிஇ (ZTE) நிறுவனம் இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில்இந்நிறுவனம் அருமையான ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் விரைவில் இசட்டிஇ HAWKEYE எனும்சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனுது கண்களை டிராக் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சாதனம் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

புஜித்சூ போன் fujitsu

புஜித்சூ போன் fujitsu

fujitsu எனப்படும் இந்த சாதனம் விரைவில் அனைத்து சந்தைகளில் விற்பனைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,இந்த சாதனம் ஜப்பான் நிறுவனத்தை சேர்ந்தது. கரதவைளர ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால், நீரில் கழுவினால்கூட இது அருமையாக செயல்படும், நீர் போனின் உள்ளே சென்றால் கூட பாதிப்பு ஏற்பாடது. மேலும் கீழே விழுந்தால்
கூட உடையாத வண்ணம் இது உருவாக்கப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த வலிமை கொண்ட சாதனம்
ஆகும்.

 ஜெமினி(Gemini)

ஜெமினி(Gemini)

ஜெமினி என்ற அழைக்கப்படும் இந்த சாதனம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்படுகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கீபோர் வசதியுடன் பெரிய டிஸ்பிளே கொண்டு இந்த சாதனம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.கண்டிப்பாக மடிக்கணினி, டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக இந்த சாதனம் வெளிவரும்.

விவோ நெக்ஸ் டூயல்

விவோ நெக்ஸ் டூயல்

இது அனைவரும் தெரிய வாய்ப்பு உள்ளது, அதாவது டூயல் ஸ்கீரின் வடிவமைப்புடன் இந்த விவோ நெக்ஸ் டூயல் சாதனம்வெளிவரும். குறிப்பாக முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு இடங்களிலும் டிஸ்பிளே இருக்கும். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் அருமையான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும். கண்டிப்பாக வீடியோ கேம் மற்றும் ஸ்கேனிங் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும் இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
These unusual designs are all set to redefine future of smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X