1 - 4 ஆண்டு வரையிலான பழைய OPPO ஸ்மார்ட்போன் உங்களிடம் இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு பேட் நியூஸ்!
1 ஆண்டு முதல் 4 ஆண்டு வரையிலான பழைய ஒப்போ ஸ்மார்ட்போன் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ஒரு பேட் நியூஸ் காத்திருக்கிறது. ஒப்போ ஏ சீரீஸ், ஒப்போ கே சீரீஸ், ஒப்போ எஃப் சீரீஸ், ஒப்போ ஃபைண்ட் சீரீஸ் மற்றும் ஒப்போ ரெனோ சீரிஸ் என மொத்தம் 5 ஒப்போ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில்.. ஏதேனும் ஒன்று உங்களுடம் உள்ளதா? ஆமென்றால் கீழ்வரும் பட்டியலில் உள்ள எந்த ஸ்மார்ட்போனிற்குமே.. கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் கிடைக்காது!
ஒப்போ நிறுவனம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதாவது மற்ற ஆண்ட்ராய்டு பிராண்டுகளை போலவே, ஒப்போ நிறுவனமும் ஆண்ட்ராய்டு 15 க்கு மேம்படுத்தப்படும் அல்லது மேம்படுத்தப்படாத போன்களின் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் ஒப்போவின் சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கையானது உண்மையை போட்டு உடைத்து விடுகிறது.

ஒப்போவின் சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கையின்படி, புதிய பிளாக்ஷிப் போன்களுக்கு நான்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும். இருப்பினும் சற்றே பழைய மாடல்கள் 3 அப்டேட்களை மட்டுமே பெறுகின்றன. ரெனோ, எஃப் மற்றும் கே-சீரிஸ் மாடல்கள் 2 ஓஎஸ் அப்டேட்களை பெறுகின்றன. நிறுவனத்தின் பட்ஜெட் ஏ-சீரிஸ் மாடல்கள் பொதுவாக 1 ஆண்ட்ராய்டு அப்டேட்டை பெறுகின்றன. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் 2 அப்டேட்கள் கிடைக்கும்.
இருப்பினும் ஒப்போ நிறுவனம் அந்த ஏ-சீரிஸ் ஸ்மர்ட்போன்களின் மாடல் பெயர்களை வெளியிடவில்லை. எனவே, மேலே உள்ள பட்டியலில் ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆஃப் தி பாக்ஸ் உடன் தொடங்கப்பட்ட எந்த ஒப்போ ஏ-சீரிஸ் போன்களும் இல்லை. ஆக அவைகள் எதுவுமே ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை பெறுவது கஷ்டம் தான். எந்தெந்த ஒப்போ ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட்டை பெறாது. இதோ லிஸ்ட்:
ஒப்போ ஃபைண்ட் சீரீஸில் எந்தெந்த மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது?
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 லைட் (Oppo Find X5 Lite)
ஒப்போ ஃபைண்ட் என் (Oppo Find N)
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 (Oppo Find X3)
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 ப்ரோ (Oppo Find X3 Pro)
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 நியோ (Oppo Find X3 Neo)
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 லைட் (Oppo Find X3 Lite) மற்றும் இதை விட பழைய ஒப்போ ஃபைண்ட் சீரீஸ் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது.
ஒப்போ ரெனோ சீரீஸில் எந்தெந்த மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது?
ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8)
ஒப்போ ரெனோ 8 4ஜி (Oppo Reno 8 4G)
ஒப்போ ரெனோ 8 இஸட் (Oppo Reno 8 Z)
ஒப்போ ரெனோ 8 லைட் (Oppo Reno 8 Lite)
ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8 Pro)
ஒப்போ ரெனோ 8 ப்ரோ பிளஸ் (Oppo Reno 8 Pro+)
ஒப்போ ரெனோ 7 (Oppo Reno 7)
ஒப்போ ரெனோ 7 5ஜி (Oppo Reno 7 5G)
ஒப்போ ரெனோ 7 லைட் (Oppo Reno 7 Lite)
ஒப்போ ரெனோ 7 இஸட் 5ஜி (Oppo Reno 7 Z 5G)
ஒப்போ ரெனோ 7 ப்ரோ (Oppo Reno 7 Pro)
ஒப்போ ரெனோ 7 எஸ்இ 5ஜி (Oppo Reno 7 SE 5G) மற்றும் இதை விட பழைய ஒப்போ ரெனோ சீரீஸ் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது.
ஒப்போ கே சீரீஸில் எந்தெந்த மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது?
ஒப்போ கே10 5ஜி (Oppo K10 5G)
ஒப்போ கே10எக்ஸ் (Oppo K10x)
ஒப்போ கே10 ப்ரோ (Oppo K10 Pro) மற்றும் இதை விட பழைய ஒப்போ கே சீரீஸ் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது.
ஒப்போ எஃப் சீரீஸில் எந்தெந்த மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது?
ஒப்போ எஃப்21 ப்ரோ (Oppo F21 Pro)
ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி (Oppo F21 Pro 5G) மற்றும் இதை விட பழைய ஒப்போ எஃப் சீரீஸ் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது.
ஒப்போ ஏ சீரீஸில் எந்தெந்த மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது?
ஒப்போ ஏ78 (Oppo A78)
ஒப்போ ஏ77எஸ் (Oppo A77s)
ஒப்போ ஏ58எக்ஸ் (Oppo A58x)
ஒப்போ ஏ56 (Oppo A56)
ஒப்போ ஏ17 (Oppo A17)
ஒப்போ ஏ17கே (Oppo A17k)
ஒப்போ ஏ1 (Oppo A1)
ஒப்போ ஏ1எக்ஸ் (Oppo A1x)
ஒப்போ ஏ1 ப்ரோ (Oppo A1 Pro) ஆகிய ஒப்போ ஏ சீரீஸ் மாடல்களுக்கு கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 15 அப்டேட் வராது.
ஒப்போ எப்போது ஆண்ட்ராய்டு 15-ஐ வெளியிடும்? கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அதன் கூகுள் ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டில் கூகுள் ஆண்ட்ராய்டு 15-ஐ வெளியிட்ட பிறகு, ஒப்போ நிறுவனம் அதன் பீட்டா டெஸ்டிங்கில் பங்கேற்பதாக அறிவித்தது. ஒப்போ பைண்ட் என்3 (Oppo Find N3), ஆண்ட்ராய்டு 15 பீட்டாவைப் பெறும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதேபோல ஆண்ட்ராய்டு 15 பீட்டா வரவிருக்கும் வாரங்களில் மற்ற சில ஒப்போ போன்களுக்கும் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications