Home
Mobile

6ஜிபி ரேம், 41எம்பி கேம் - வாய்பிளக்க வைக்கும் நோக்கியா 9.!

ஸ்மார்ட்போன்களின் கடவுள்.!

By Muthuraj

கடந்த பிப்ரவரி மாதத்திற்க்கு முன்பு நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் பிளாக்ஷிப் கருவிகளை அதாவது தலைமை ஸ்மார்ட்போன்களை நிகழ்ந்து முடிந்த மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

6ஜிபி ரேம், 41எம்பி கேம் - வாய்பிளக்க வைக்கும் நோக்கியா 9.!

ஆனால் நிகழ்வில் முன்னரே வெளியான நோக்கியா 6 கருவியின் உலக பதிப்புடன் நோக்கியா 5, 6 மற்றும் நோக்கியா 3310 ஆகிய கருவிகள் தான் அறிமுகமாகின.!

அதற்காக நோக்கியா 8 மற்றும் நோக்கியா பி1 ஆகிய கருவிகள் வெறும் புரளிகள் என்றவொரு முடிவிற்கு வந்துவிட வேண்டாம். எதிர்பார்க்கும் அம்சங்கள் கொண்டு வெளிவராமல் போவதே ஆச்சரியம் தான் என்கிற நிலையில் கருவிகள் வெளியாகாமல் போவதென்பது மிகவும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

நோக்கியா 9

நோக்கியா 9

அப்படியாக, நோக்கியா 8 மற்றும் நோக்கிய பி1 கருவிகள் தான் அடுத்த நோக்கியாவின் இலக்காக இருக்குமென்று நாம் அனைவரும் எதிர்நோக்கும் நிலையில் நம்மை வாய் பிளக்க வைக்கும் நோக்கியா 9 சார்ந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.!

உயர் இறுதி கருவி

உயர் இறுதி கருவி

நோக்கியா நிறுவனத்தின் முதன்மை கருவிகள் வெளியாகிவிட்ட நிலையிலும் கூட நோக்கியா ரசிகர்கள் இன்னும் ஆவலுடன் நோக்கியா நிறுவனத்தின் உயர் இறுதி கருவிகளின் வெளியீட்டை எதிர்பார்க்கின்றனர் என்பது வெளிப்படை.

தவிர்க்கமுடியாத அம்சங்கள்

தவிர்க்கமுடியாத அம்சங்கள்

இதை மனதில் வைத்து, புகழ்பெற்ற கான்செப்ட் டிசைன் யூட்யூப் சேனல் ஆன கான்செப்ட் க்ரியேட்டர் சில நோக்கியா 9 கருவி சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது. வெளியான வீடியோவின் மூலம் நம்மக்கு கிடைத்த நோக்கிய 9 கருவி சார்ந்த "தவிர்க்கமுடியாத" அம்சங்கள் ஆனது நோக்கியா 9 கருவியை ஸ்மார்ட்போன்களின் கடவுள் போன்றே உருவகப்படுத்துகிறது என்றே கூறலாம்.

ரேம்

ரேம்

நோக்கியா 9 ஆனது நிறுவனத்தின் ஒரு தலைமை ஸ்மார்ட்போன் என்று நம்பப்படுகிறது. மேலும் இக்கருவி ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற இது மற்ற உற்பத்தியாளர்களை விட சக்தி வாய்ந்த அம்சங்களை பெற்றிருக்க வேண்டும். எனவே, நோக்கியா 9 கருவியானது 6ஜிபி ரேம் உடனாக ஒரு ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் கருத்தமையப்பட்டிருக்கிறது. உடல் உலோக கொண்டுள்ளது போல் தெரியும் இக்கருவி ஒரு ஆடம்பரமான வெர்டு பிரீமியம் கருவியாகவும் தோன்றுகிறது.

நினைவுபடுத்துகிறது

நினைவுபடுத்துகிறது

நோக்கியா 9 கருவியின் கேமரா அமைப்பை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியாது ஆனால் மறுபக்கம் இது நோக்கியா லூமியா 1020 கருவியை நினைவுபடுத்துகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

41 எம்பி ப்யூர்வியூ கேமரா சென்சார்

41 எம்பி ப்யூர்வியூ கேமரா சென்சார்

பின்புறம் உள்ள கேமரா அதிர்ச்சி தரும் வண்ணம் 41 எம்பி ப்யூர்வியூ கேமரா சென்சார் விரிவு கொண்டுள்ளது மற்றும் இது நிச்சயமாக மாற்றம் காணும் ஸ்மார்ட்போன் அரங்கில் மகத்தான வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மெல்லிய உடல்

மெல்லிய உடல்

உடன் நோக்கியா 9 கருவியில் பல மேம்பாடுகளை நோக்கியா நிறுவனம் நிகழ்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உலோகத்தால் செய்யப்பட்ட 7.4மிமீ மெல்லிய உடல், மற்றும் கூறப்படும் நோக்கியா 9 வடிவமைப்பு ஆனது சமச்சீராக தெரிகிறது. உடன் வடிவமைப்பில் சப்வூப்பர் (ஒலிபெருக்கி) வெட்டு ஒன்று இருப்பதாகவும் தெரிகிறது.

பேட்டரி

பேட்டரி

ஸ்னாப்டிராகன் 835 செயலி மற்றும் 6ஜிபி ரேம் தவிர்த்து நோக்கியா 9 கருவியில் 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு சேமிப்பு ஆதரவு இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது. இக்கருவி போதுமான மற்றும் கண்ணியமான ஒரு 3650எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

வீடியோ

உங்கள் கைகளில் இருக்கும் தொலைபேசியை வெறுக்க வைக்கும் நோக்கியா 9 கான்செப்ட் வீடியோ இதோ.!

நோக்கியா பி1 கருவி சார்ந்த தகவல்கள்

நோக்கியா பி1 கருவி சார்ந்த தகவல்கள்

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு கருவிகள் சார்ந்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்த நாளில் இருந்தே எதிர்பார்க்கப்படும் நோக்கியா பி1 கருவி சார்ந்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா 3310 இந்த முறையாவது வருமா? அல்லது 2014 போல் ஆகுமா?

More from GizBot

Best Mobiles in India

English summary
These Nokia 9 concept images can make you dribble. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X