வெளியான கேலக்ஸி எஸ்8 லேட்டஸ்ட் புகைப்படங்கள் கூறும் உண்மைகள்.!

முன்னணி இணையதளம் ஒன்றில் லீக் ஆகியுள்ள கேலக்ஸி S8 மாடல் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போன்

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி S8 மாடல் விரைவில் வெளிவர உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

வெளியான கேலக்ஸி எஸ்8 லேட்டஸ்ட் புகைப்படங்கள் கூறும் உண்மைகள்.!

இந்நிலையில் இந்த மாடல் குறித்து அவ்வப்போது செய்திகள் லீக் ஆகி கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த மாடலின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே கருதப்படுகிறது.

முன்னணி இணையதளம் ஒன்றில் லீக் ஆகியுள்ள கேலக்ஸி S8 மாடல் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போன்

டூயல் எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளேக்கள்:

டூயல் எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளேக்கள்:

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் புதிய அறிமுகமாக டூயல் எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது என்பது லீக் ஆகியுள்ள புகைப்படங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

QHD சூப்பர் அமோLED 4K டிஸ்ப்ளேக்கள்:

QHD சூப்பர் அமோLED 4K டிஸ்ப்ளேக்கள்:

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன், கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் என இருவித மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டுமே QHD சூப்பர் அமோLED 4K டிஸ்ப்ளேக்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பிசிக்கல் பட்டன் எதற்கு தெரியுமா?

இந்த பிசிக்கல் பட்டன் எதற்கு தெரியுமா?

கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் என இரண்டு மாடல்களிலும் பிசிக்கல் பட்டன் ஒன்று வால்யூம் பட்டன் அருகே உள்ளது. இதன் மூலம் வாய்ஸ் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பியை இயக்க முடியும்

கருப்பு நிறத்தில் கவர்ச்சியான தோற்றம்

கருப்பு நிறத்தில் கவர்ச்சியான தோற்றம்

கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் என இரண்டு மாடல்களுமே கருப்பு நிறத்தில் கவர்ச்சியான தோற்றத்தை கொண்டுள்ளது. டூயல் எட்ஜ் கர்வ் டிசைனுடன் கருப்பு நிறத்தில் அமைந்துள்ள இந்த போனின் லுக் மிகச்சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

3.5mm ஹெட்போன் ஜாக்:

3.5mm ஹெட்போன் ஜாக்:

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன் படங்களில் இருந்து பார்க்கும்போது இந்த போனின் அடிப்பகுதியில் 3.5mm ஹெட்போன் ஜாக் இணைக்கும் வசதி உள்ளது.

இனி சென்னையில் 4ஜி-வோடபோன்.!இனி சென்னையில் 4ஜி-வோடபோன்.!

பிங்கர் பிரிண்ட் சென்சார்:

பிங்கர் பிரிண்ட் சென்சார்:

இப்போது வரும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் பிங்கர்பிரிண்ட் சென்சார் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனிலும் பின்பக்கம் பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.

வளைந்த வட்டமான அட்டகாசமான டிசைன்:

வளைந்த வட்டமான அட்டகாசமான டிசைன்:

ஒரு ஸ்மார்ட்போனின் வெளிப்புற தோற்றம் மிகவும் முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு சாம்சங் கேலக்ஸி S7 மாடல் போலவே இந்த சாம்சங் கேலக்ஸி S8 மாடலிலும் வளைந்த வட்டமான அழகிய டிசைனில் அமைந்துள்ளது. மேலும் கையில் பிடித்து கொள்வதற்கு வசதியான மாடலும் கூட

சிகப்பு நிறத்திலுமா?

சிகப்பு நிறத்திலுமா?

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில்தான் வரும் என்று பெரும்பாலான லீக் படங்கள் கூறிய போதிலும் சிகப்பு நிறத்தில் ஒரு மாடல் வரவும் வாய்ப்பு இருப்பதாக இந்த படம் கூறுகிறது.

நீல நிறமும் உண்டா?

நீல நிறமும் உண்டா?

இதே சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன் நீல நிறத்திலான ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளதால் நீல நிறத்தில் வரவும் வாய்ப்பு உள்ளது.

பச்சையாகவும் இருக்கலாம்.

பச்சையாகவும் இருக்கலாம்.

கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமின்றி பச்சை நிறத்திலும் சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன் வரலாம் என்று இந்த லீக் இமேஜ் கூறுகிறது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேறு என்னென்ன முக்கிய வசதிகள்:

வேறு என்னென்ன முக்கிய வசதிகள்:

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டில் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. 4 GB ரேம், மற்றும் 6GB ரேம் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போன், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் மற்றும் 256 GB மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியுடனும் வெளிவருகிறது.

சாம்சங் கேலக்ஸி S7 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் போலவே இந்த சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனில் 12MP திறன் கொண்ட டூயல் பிக்சல் வசதி கொண்ட பின் கேமிராவும், 8MP திறன் கொண்ட செல்பி கேமிராவும் இருக்கும்

ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் ஓஎஸ்:

ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் ஓஎஸ்:

அடுத்த தலைமுறையினர்களுக்கான ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் ஓஎஸ் தான் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டெண்ட், ஆப்பிள் சிறி போலவே இந்த போனில் பிக்ஸ்பியை அறிமுகம் செய்கிறது.

மேலும் இந்த போனின் பேட்டரி 3250 mAh திறன் கொண்டுள்ளதால் சார்ஜ் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் IP68 சான்றிதழுடன் இந்த போன் வருகிறது என்பது கூடுதல் சிறப்பானதாக கருதப்படுகிறது.

Image Source:Sammobile.com

Best Mobiles in India

English summary
These leaked images of Samsung galaxy S8 shows everything about the exterior design of the smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X