Home
Mobile

போய் வா நண்பா.. செப்.9 க்கு பிறகு இந்த 4 iPhone மாடல்களும் விற்கப்படாது.. ஏன்?

2025 செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஐபோன் மாடல்களான ஐபோன் 17 சீரிஸை (iPhone 17 Series) அறிமுகம் செய்யவுள்ளது. வரவிருக்கும் ஐபோன் 17 சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ஐபோன் 17 சீரீஸின் கீழ் பேஸிக் ஐபோன் 17, முற்றிலும் புதிய ஸ்லிம் ஆன மற்றும் லைட் வெயிட் ஆன ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஆப்பிளின் 2025 பிளாக்ஷிப் ஆன ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

செப்.9 க்கு பிறகு இந்த 4 iPhone மாடல்களும் விற்கப்படாது.. ஏன்?

மேற்கண்ட புதிய ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள் அறிமுகமாகும் அதே நாள் (செப் .9) ஆனது சில பழைய ஐபோன் மாடல்களின் கடைசி நாளாகவும் இருக்கும். ஏனென்றால் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன் மாடல்களை விற்பனை செய்வதை நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இப்படியாக புதிய ஐபோன் 17 சீரீஸ் அறிமுகமானது எந்தெந்த பழைய மாடல்கள் சந்தையில் இருந்து வெளியேறும் என்கிற பட்டியல் இதோ:
1. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro)
2. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)
3, ஐபோன் 15 (iPhone 15)
4. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus)

ஆப்பிள் நிறுவனம் முந்தைய ஆண்டிலிருந்து அதன் இரண்டு நான்-ப்ரோ மாடல்களை வைத்திருக்கிறது மற்றும் அவைகளை தள்ளுபடியில் விற்கிறது. ஆக ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் இன்னும் சந்தையில் கிடைக்கக்கூடும. இதன் பொருள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் படிப்படியாக நிறுத்தப்படும்; கையிருப்பு உள்ள வரை மட்டுமே வாங்க கிடைக்கும்.

ப்ரோ மாடல்களைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு வெளியான மாடலக்ளை படிப்படியாக நீக்கி சமீபத்திய மாடல்களுக்கு ஆப்பிள் முக்கியத்துவம் கொடுக்கும். இதன் விளைவாக, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வரும்போது, ​​ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை நிறுத்தப்படும்.

ஐபோன் மாடல்கள் மட்டுமல்ல வேறு சில பழைய ஆப்பிள் தயாரிப்புகளும் கூட நிறுத்தப்படும்? ஆப்பிள் நிறுவனமானது ஐபோன் 17 சீரீஸ் உடன் சேர்த்து அதன் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் வாட்ச் அல்ட்ரா 3 மாடல அறிமுகப்படுத்தினால், தற்போதுள்ள வாட்ச் சீரிஸ் 10 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவைகள் படிப்படியாக நிறுத்தப்படலாம். கடைசியாக ஏர்போட்ஸ் ப்ரோ செக்கென்ட ஜெனரேஷனும் நிறுத்தப்படலாம்; இது ஏர்போட்ஸ் ப்ரோ தேர்ட் ஜெனெரேஷனால் நடக்கலாம்.

ஆப்பிள் செப்டம்பர் 9 வெளியீட்டு நிகழ்வு விவரங்கள்: "ஆவ் ட்ராப்பிங்" (Awe Dropping) என்கிற பெயரின் கீழ் நடக்கவுள்ள இந்த ஆப்பிள் நிகழ்வு 2025 செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், சரியாக செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் தொடங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபோன் 17 சீரீஸ் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீயின் கூற்றுப்படி, ஐபோன் 16 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது ஐபோன் 17 மாடலை தவிர்த்து ஐபோன் 17 சீரீஸில் உள்ள மற்ற மாடல்களின் விலை சுமார் $50 (தோராயமாக ரூ.4,000) உயர்த்தப்படலாம். ஆக ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro Price) விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) அறிமுகம் செய்யப்படலாம் (இந்திய விலை இதைவிட அதிகமாகவே இருக்கும் )

இதேபோல ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max Price) மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம். புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air Price) மாடலின் ஆரம்ப விலை $949 (தோராயமாக ரூ.83,000) ஆக இருக்கலாம். ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 மாடலின் அதே வெளியீட்டு விலையை தக்க வைத்துக் கொள்ளலாம். அதாவது $799 (தோராயமாக ரூ.67,100) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
These iPhone Models to Be Discontinued After Apple iPhone 17 Series Launch on September 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X