இன்பதிர்ச்சி கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறும் போன்கள்.. பட்டியல் இதோ.. உற்சாகத்தில் பயனர்கள்..
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் சில மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்கத் தொடங்கியுள்ளது.
அதாவது கடந்த ஜூன் மாதத்தில் சில போன்களுக்கு மட்டும் பீட்டா பதிப்பு திட்டத்தை தொடங்கியது. ஆனால் தற்போது பல புதிய அம்சங்கள் மற்றும் ஏராளமான மேம்பாடுகளைக் கொண்ட ஆண்ட்ராய்டு 16 நிலையான பதிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதுவும் ஒன்பிளஸ், விவோ, நத்திங் மற்றும் சியோமி போன்ற பெரிய பிராண்டுகளுக்கு முன்னதாக மோட்டோரோலா ஆண்ட்ராய்டு 16 இன் நிலையான அப்டேட்டை வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட எட்ஜ் 60 ப்ரோ ஆண்ட்ராய்டு 16 நிலையான பதிப்பை முதலில் பெற்ற மோட்டோரோலா சாதனமாகும். அதன் பின்னர், அந்த அப்டேட் மெதுவாக பிற எட்ஜ் மாடல்கள் மற்றும் ஜி-சீரிஸ் போன்களுக்கும் விரிவடைந்தது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது gizmochina இணையதளம் தற்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெறும் மோட்டோரோலா போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு 16 நிலையான அப்டேட்டை (stable Android 16 update) பெறும் மோட்டோரோலா போன்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro)
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion)
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion)
மோட்டோரோலா மோட்டோ ஜி 2025 (Motorola Moto G 2025)
தற்போது சில போன்களுக்கு மட்டுமே ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. வரும் வாரங்களிலும் மேலும் பல மோட்டோரோலா போன்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெற்றுள்ள மோட்டோரோலா போன்களில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று மோட்டோரோலா அறிமுகம் செய்த மோட்டோ ஜி06 பவர் (moto g06 power) அம்சங்கள் மற்றும் விலையைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (moto g06 power Specifications): ஆக்டோ-கோர் மீடியடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1640 × 720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி வதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6.0, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போனின் விலை ரூ.7499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








