ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்!
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் உட்பட எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் நாட்டம் ஆன்லைன் தளங்களை நோக்கித் தான் செல்கிறது. பெரும்பாலான பொருட்கள் இப்போதெல்லாம் ஆன்லைன் மூலமாகவே வாங்குவதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்
சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தங்களது சானங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்களில் விற்கப்பட்டு வரும் நேரத்தில் சில ஸ்மார்ட்போன்கள் மட்டும் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கின்றன. அத்தகையை ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

போகோ எம் 2 ப்ரோ
போகோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது 48 எம்.பி முதன்மை கேமரா, ஸ்னாப்டிராகன் 720 ஜி எஸ்ஓஎஸ், 16 எம்பி செல்பி கேமரா சென்சார், ஆண்ட்ராய்டு 10, போக்கோ லாஞ்சர் 2.0, எம்ஐயுஐ 11 மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனம் ஆன்லைன் தளங்களில் மட்டுமே கிடைக்கிறது.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ்
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 ஜி சாசி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸுடன் வருகிறது. மேலும் இதில் முதன்மை 64 எம்.பி லென்ஸ், 8 எம்பி செகண்டரி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மூன்றாம் நிலை லென்ஸ் மற்றும் 2 எம்பி ஆழம் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் 16MP செல்பி கேமரா மற்றும் 5000 mAh பேட்டரியுடன் வருகிறது.

ரியல்மி எக்ஸ் 3
இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எல்சிடி எஃப் எச்.டி + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855+ எஸ்ஓசி, 64 எம்.பி முதன்மை சாம்சங் ஜி.டபிள்யூ 1 சென்சார், 8 எம்.பி பெரிஸ்கோப் லென்ஸ், 8 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி ஆழம் சென்சார் கொண்டுள்ளது. இந்த சாதனம் 4200mAh பேட்டரி மற்றும் 30W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்
இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, எஃப்எச்.டி + ரெசல்யூஷன், சைட்-மவுண்டட் கைரேகை சென்சார், 64 எம்.பி சாம்சங் ஜி.டபிள்யூ பிரைமரி சென்சார், குவாட் கேமரா அமைப்பு மற்றும் பெரிஸ்கோப் ஸ்டைல் கேமராவுடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் நீண்ட தூர காட்சிகளை எடுக்க 60x ஜூம் ஆதரவு உள்ளது.

மோட்டோரோலா ஜி 8 பவர் லைட்
மோட்டோரோலா ஜி 8 பவர் லைட் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியா டெக் ஹீலியோ பி 35 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இது பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 8 எம்.பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications