பட்டித்தொட்டி எங்கும் "வசூல்" செய்யப்போகும் 3 புதிய Redmi போன்கள்!

|

"ஒவ்வொரு மாதமும் 10 - 15 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் கூட.. என்னுடைய முழு கவனமும் புதிதாக வரும் ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்களின் மீது மட்டுமே இருக்கும்!" என்று கூறும் அளவிற்கு நீங்களொரு Redmi பிரியரா?

108 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி: ப்ரீமியம் அம்சம், பட்ஜெட் விலை!

ஆமென்றால், நீங்கள் அடுத்ததாக குறிவைக்க வேண்டியது "இந்த" 3 ரெட்மி ஸ்மார்ட்போன்களின் மீதும் தான்!

அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நாம் இங்கே பேசும் புதிய Redmi போன்கள்!

நாம் இங்கே பேசும் புதிய Redmi போன்கள்!

இந்த கட்டுரையில் நாம் முதலில் பேசப்போவது ரெட்மி ஏ1 (Redmi A1) மற்றும் ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) மாடல்களை பற்றி தான்.

Redmi A1+ ஸ்மார்ட்போன் ஆனது ஐஎம்இஐ (IMEI) தரவுத்தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது 220733SFG என்கிற மாடல் நம்பர் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

அதன் வழியாக இது Redmi A1 ஸ்மார்ட்போனின் "அடுத்தகட்ட" மாறுபாடாக இருக்கும் என்பதையும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ரெட்மி ஏ1 சீரீஸின் ஒரே நேரத்தில் அல்லது தனித்தனியாக அறிமுகமாகும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!

Redmi A1 ஸ்மார்ட்போனின் சிப்செட்?

Redmi A1 ஸ்மார்ட்போனின் சிப்செட்?

ரெட்மி A1 ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் பல வகையான சான்றிதழ் மற்றும் தரப்படுத்தல் தளங்களில் காணப்பட்டுள்ளது.

இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால், ரெட்மி ஏ1 மாடல் ஆனது அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தரவுத்தளத்திலும் கீக்பெஞ்சிலும் காணப்பட்டது.

யுஎஸ் எஃப்சிசி பட்டியலைப் பகிர்ந்து கொண்ட ஒரு டிப்ஸ்டரின் கூற்றுப்படி, Redmi A1 ஆனது MediaTek Helio A22 SoC மூலம் இயக்கப்படும்.

ரெட்மி A1 பட்ஜெட் ஸ்மார்ட்போன்-ஆ? இல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்-ஆ?

ரெட்மி A1 பட்ஜெட் ஸ்மார்ட்போன்-ஆ? இல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்-ஆ?

மீடியாடெக் ஹீலியோ A22 SoC-ஐ தவிர்த்து Redmi A1 ஆனது அளவீட்டில் 164.67மிமீ (நீளம்) மற்றும் 76.56மிமீ (அகலம்) கொண்டதாக இருக்கலாம் என்றும் US FCC பட்டியல் தெரிவிக்கிறது.

மேலும் ஸ்மார்ட்போன் 2.4GHz வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்புக்கான ஆதரவுடனும் வரலாம் என்று கூறுகிறது. ஆகமொத்தம் Redmi A1 ஸ்மார்ட்போன் ஆனது (கண்டிப்பாக) ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகையில் உள்ள Redmi A1+ ஸ்மார்ட்போன் பற்றி அதிக தகவல்கள் இல்லை. ஆனால் பெரும்பாலும் அதுவும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகவே வெளியாகும்!

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

இதற்கிடையில் Redmi 11A ஸ்மார்ட்போனும் ரெடியாகிறது!

இதற்கிடையில் Redmi 11A ஸ்மார்ட்போனும் ரெடியாகிறது!

ரெட்மி ஏ1 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, சியோமி நிறுவனம் Redmi 11A என்கிற ஸ்மார்ட்போனிலும் வேலை செய்து வருகிறது. இது ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆக வரும் என்று நம்பப்படுகிறது.

அதாவது ரெட்மி 11ஏ ஸ்மார்ட்போன் ஆனது Redmi 10A மாடலின் மேம்பட்ட பதிப்பாக இருக்கும், நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 10ஏ ஆனது 4G கனெக்டிவிட்டியை மட்டுமே ஆதரிக்கிறது.

Redmi 11A ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Redmi 11A ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரெட்மி 11A ஸ்மார்ட்போனின் மாடல் பெயரே இப்போது தான் வெளி வந்துள்ளது. ஆகையால், அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பதை பற்றி போதுமான விவரங்கள் இல்லை.

ஆனால் 3C சான்றிதழ் தளம் வழியாக இதன் 5G ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் காணப்பட்ட மீடியாடெக்கின் ஹீலியோ சிப்செட் ஆனது 11ஏ மாடலில் Dimensity SoC ஆக அல்லது ஒரு Snapdragon சிப்செட் உடன் மாற்றப்படலாம். ஆக இதுவும் "பட்ஜெட் விலை" 5ஜி ஸ்மார்ட்போனாகவே வரும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
These are the 3 New Upcoming Redmi Phones Launch Soon including Redmi A1 Plus Redmi 11A 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X