எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!

|

ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக நீங்கள் ஒதுக்கிய பட்ஜெட் ரூ.10,000 ஆக இருந்தாலும் சரி அல்லது.. ரூ.15,000 ஆக இருந்தாலும் சரி.. அல்லது அதிகபட்சம் ரூ.20,000 ஆக இருந்தாலும் சரி..

இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகும் 3 புதிய ஸ்மார்ட்போன்களுமே - உங்களுக்கான ஒரு போன் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த 3 ஸ்மார்ட்போன்களின் "முன்னோடிகளும்" பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த மாடல்கள் ஆகும்!

மூன்றுமே ஒரே நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தான்!

மூன்றுமே ஒரே நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தான்!

நாம் இங்கே பேசும் மூன்று ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் (Samsung) நிறுவனத்தின் மாடல்கள் ஆகும். அந்த மூன்று மாடல்களில் ஒன்று - நிறுவனத்தின் எம் சீரிஸின் (M Series) கீழ் வருகிறது. மீதமுள்ள இரண்டும் ஏ சீரிஸின் (A Series) கீழ் வருகிறது.

அவைகள் - சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி (Samsung Galaxy M23 5G), சாம்சங் கேலக்ஸி ஏ04 (Samsung Galaxy A04) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ04இ (Samsung Galaxy A04e) ஆகும்.

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

அடுத்த சில தினங்களில் இந்திய அறிமுகம்!

அடுத்த சில தினங்களில் இந்திய அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்தின் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இன்னும் சொல்லப்போனால் அடுத்த சில தினங்களில் கூட அறிமுகம் செய்யப்படலாம்.

ஏனென்றால், மேற்குறிப்பிட்ட 3 ஸ்மார்ட்போன்களின் ஆதரவு பக்கங்கள் ஆனது (Support Pages) சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேரலையில் உள்ளன. ஆக இந்த 3 ஸ்மார்ட்போன்களும் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்பட்டு, உடனே விற்பனைக்கு வரலாம்!

விலை மற்றும் அம்சங்கள் பற்றி குழப்பமே இல்லை!

விலை மற்றும் அம்சங்கள் பற்றி குழப்பமே இல்லை!

இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே, அதாவது Samsung Galaxy M23 5G, Samsung Galaxy A04 மற்றும் Samsung Galaxy A04e ஆகிய 3 ஸ்மார்ட்போன்களுமே ஏற்கனவே சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

எனவே இந்த 3 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்தும், அவைகளின் விலை நிர்ணயங்கள் குறித்தும் எந்த விதமான குழப்பமும் இல்லை.

இந்த 18 VIVO Phone-களில் 1 உங்களிடம் இருந்தால் 2022 முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும்! என்னது அது?இந்த 18 VIVO Phone-களில் 1 உங்களிடம் இருந்தால் 2022 முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும்! என்னது அது?

சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி: முக்கிய அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி: முக்கிய அம்சங்கள்

கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6 இன்ச் அளவிலான LCD HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த One UI 4.1 உடன் வருகிறது.

இது என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்?

இது என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்?

50MP மெயின் கேமரா + 8MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் + 2MP மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் கேலக்ஸி எம்23 5ஜி ஆனது முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

கடைசியாக இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Samsung Galaxy M23 5G ஆனது இந்தியாவில் ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

சாம்சங் கேலக்ஸி ஏ04இ: முக்கிய அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ04இ: முக்கிய அம்சங்கள்

சாம்சங் Galaxy A04e ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G35 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 4.1 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்), 13MP + 2MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 5MP செல்பீ கேமரா, 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

இதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

இந்தியாவை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.

அது உண்மையாகும் பட்சத்தில், இதன் விலை நிர்ணயம் ரூ.10,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.9,990 க்கு வெளியாகலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ04: முக்கிய அம்சஙகள்

சாம்சங் கேலக்ஸி ஏ04: முக்கிய அம்சஙகள்

இந்த பட்டியலில் உள்ள கடைசியாக உள்ள சாம்சங் Galaxy A04 ஆனது 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, எக்ஸிநோஸ் 850 எஸ்ஓசி, 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யூஐ 4.1 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்), 50MP + 2MP டூயல் கேமரா செட்டப், 5MP செல்பீ கேமரா மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

இதுவொரு மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன் ஆகும்!

இதுவொரு மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன் ஆகும்!

இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Samsung Galaxy A04 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,490 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம் சாம்சங் நிறுவனத்தின் மற்ற ஏ-சீரீஸ் மற்றும் எம்-சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே இந்த மாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடையும், நல்ல விற்பனையை சந்திக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்!

Photo courtesy: Samsung

Best Mobiles in India

English summary
These 3 new Samsung phones hopefully become best selling budget smartphones in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X