Home
Mobile

ஒரு குட் நியூஸ்.. கூடவே ஒரு பேட் நியூஸ்.. இந்த வருஷம் Samsung போன் வாங்க போறவங்க கவனத்திற்கு!

அவன் தான்டா பெரிய வேலையை பார்த்து விட்டான் என்று வாய்விட்டு கதறாத குறையாக சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது ஆப்பிள் (Apple) நிறுவனத்தை கடிந்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் இவ்விரு நிறுவனங்களுமே வேறு எந்த நிறுவனத்தையும் போட்டியாக பார்ப்பதில்லை; இவ்விரு நிறுவனங்களுக்கு இடையே தான் போட்டியே!

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 விலையை மாற்றவில்லை (அதாவது ஐபோன் 16 க்கும் ஐபோன் 17 க்கும் பெரிய அளவிலான விலை வித்தியாசம் இல்லை) என்பதை, சாம்சங் நிறுவனம் அதன் வரவிருக்கும் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் தொடக்க விலையை அதிகரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருஷம் Samsung போன் வாங்க போறவங்க கவனத்திற்கு!

தொடர்ந்து வரும் டிஆர்எம் (DRM) பற்றாக்குறை, அதிகரித்து வரும் காம்போனென்ட் செலவுகள் மற்றும் கட்டணங்கள் ஆனது 2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களின் விலைகளை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கடினமான சூழ்நிலையிலும் ஆப்பிள் உடனான போட்டியை தக்கவைக்க சாம்சங் ​​நிறுவனம் இறுதியாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது - இப்போதைக்கு விலை உயர்வை தவிர்க்க திட்டமிட்டுள்ளது.

ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்26 மாடலின் தொடக்க விலையை அதன் முன்னோடியான கேலக்ஸி எஸ்25 மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் சாம்சங் நிறுவனம் அதன் லாப வரம்புகளில் 10-15% பாதிப்பை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டிரேம் (DRAM - Dynamic Random Access Memory) மற்றும் NAND இல் உள்ள அதிக லாப வரம்புகள் இந்த தாக்கத்தை ஈடுசெய்ய உதவலாம்

இந்த விலை முடக்கம் அமெரிக்க சந்தைக்கு மட்டுமே பொருந்தும். தென் கொரியாவில், அதாவது சாம்சங்கின் சொந்த நாடான தென் கொரியாவில், கொரிய வோனின் மதிப்பு குறைந்து வருவதால், சாம்சங் நிறுவனம் பெரும்பாலும் விலைகளை அதிகரிக்கும். ஐரோப்பிய மற்றும் பிற ஆசிய சந்தைகளிலும் இதேபோன்ற அதிகரிப்பு சாத்தியமாகலாம்

ஒருவேளை இந்தாண்டும் சாம்சங் விலையை மாற்றாமல் வைத்திருந்தால், இந்நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் விலைகளை உயர்த்துவதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக தவிர்க்கும். 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கேலக்ஸி இஸட் போல்ட் 8 (Galaxy Z Fold 8) மற்றும் பிளிப் 8 (Flip 8) ஆகியவற்றுக்கும் இந்த "விலை முடக்கம்" பொருந்தகலாம்.

மேலே நாம் பார்த்தது குட் நியூஸ்.. பேட் நியூ என்னவென்றால்.. பிளாக்ஷிப் போன்கள் விலை உயர்வில் இருந்து தப்பிக்க, மிட்-ரேன்ஜ் கேலக்ஸி ஏ போன்கள் மாட்டிக்கொண்டது. ஆம் துரதிர்ஷ்டவசமாக, சாம்சங் அதன் மிட்-ரேன்ஜ் கேலக்ஸி ஏ போன்களின் விலையை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த மாடல்களில் குறைந்த லாப வரம்புகள் இருப்பதால், காம்போனென்ட்களின் விலையில் ஏற்படும் செங்குத்தான அதிகரிப்பை சாம்சங் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

ஆக துரதிர்ஷ்டவசமாக, இந்த விலை உயர்வு ஆனது பெரும்பாலும் அர்த்தமுள்ள ஹார்ட்வேர் மேம்படுத்தல்கள் எதுவும் இல்லாமல், அதாவது அம்சங்கள் அடிப்படையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான பயனர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சாம்சங் மட்டுமல்ல - துரதிர்ஷ்டவசமாக, 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான போன்களின் போக்கு இதுவாகவே இருக்கலாம்.

உத்தாரத்திற்கு சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி மாடலை எடுத்துக்கொள்ளலாம். இது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்யும் படியாக, இந்த ஸ்மார்ட்போன் பல சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டு உள்ளது. மேலும் அவைகளின் வழியாக சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன், முக்கிய அம்சங்கள் ஆகியவைற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

கூகுள் பிளே (Google Play) கன்சோலில் ஆதரிக்கப்படும் டிவைஸ்களின் பட்டியல் இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி மாடல் இடம்பெற்றுள்ளது. ஆக இது விரைவில் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை குறிக்கிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, புதிய 5ஜி மாடல் ஆனது முன்னதாக வெளியான பழைய 4ஜி மாடலை போலவே ரியர் டிசைனை கொண்டிருக்கும் மற்றும் டூயல் ரியர் கேமரா யூனிட் உடன் வரும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் உடன் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் MT6835V/TZ சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது 2.4ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக்டு ஸ்பீடை வழங்குகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 300 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 720x1,600 பிக்சல் ரெசல்யூஷன் உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம், 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். விலை ரூ.10,000 க்குள் (ரூ.9,499) இருக்கலாம். கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
There is a Good news and a bad news Attention those who are going to buy a Samsung phone this year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X