டைம் டிராவலில் இரண்டு வகை! அதில் ஒன்று நிச்சயம் சாத்தியம் என்கின்றனர் இயற்பியலாளர்கள்..

"நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஐன்ஸ்டீன் அதற்கான வழியை நமக்கு காட்டியுள்ளதால் அதை எப்படி செய்வது என்பது நமக்கு தெரியும்.

|

கொலம்பியா பல்கலைகழகத்தில் இயற்பியல் மற்றும் கணித பேராசிரியராக பணியாற்றுபவரும், வோர்ல்டு சயின்ஸ் பெஸ்டிவலின் இணை நிறுவனருமான ப்ரைன் கிரின் டைம் டிராவல் பற்றி தனது வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
இரண்டு வகையான டைம்டிராவல்கள் உள்ளதாகவும், அவையிரண்டும் முற்றிலும் வேறுபட்டவை எனக் கூறும் ப்ரைன், அதைஅறிந்துகொள்வது மிகவும் கடினம் என்கிறார். ஆனால் எதிர்காலத்திற்கு செல்லும் டைம்டிராவல் நிச்சயம் சாத்தியமானது என்கிறார்.

டைம் டிராவலில் இரண்டு வகை! அதில் ஒன்று நிச்சயம் சாத்தியம் என்கின்றனர்

"நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஐன்ஸ்டீன் அதற்கான வழியை நமக்கு காட்டியுள்ளதால் அதை எப்படி செய்வது என்பது நமக்கு தெரியும். சிலருக்கு இது தொடர்பாக தெரிந்திருப்பது அவர்களது இரத்தத்திலேயே உள்ளது ஆச்சர்யமாக உள்ளது. நீங்கள் விண்வெளிக்கு வெளியில் சென்று ஒளியின் வேகத்தில் பயணித்து திரும்பிவருகையில், உங்கள் கடிகாரத்தில் நேரம் மிகவும் மெதுவாக செல்லும் என்பதை ஐன்ஸ்டீன் காட்டியுள்ளார்.எனவே அதிலிருந்து வெளியே வரும்போது பூமியில் அது எதிர்காலமாக இருக்கும். அதாவது நீங்கள் எதிர்காலத்திற்கு டைம்டிராவல் செய்திருப்பீர்கள்" என்கிறார் ப்ரைன்.

நியூட்ரான்

நியூட்ரான்

நியூட்ரான் நட்சத்திரம், கறுப்பு துளை போன்ற நல்ல வலுவானப புவிஈர்ப்புவிசை ஆதாரத்தின் நீங்கள் அருகே இருந்தால், அந்த பொருளின் விளிம்பிற்கு அருகே இருப்பது போலவும், உங்கள் நேரமும் மற்றவர்களிடம் ஒப்பிடும் போது மெதுவாகவும் இருக்கும் . ஆகையால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது, ​​அது மீண்டும் வருங்காலத்தில் இருக்கலாம் என்பதையும் ஐன்ஸ்டீன் காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய விஷயமல்ல

சர்ச்சைக்குரிய விஷயமல்ல

இது சர்ச்சைக்குரிய விஷயமல்ல. தாங்கள் என்ற பேசுகிறோம் என்பதை அறிந்து பேசும் எந்த இயற்பியலாளரும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் கடந்த காலத்திற்கு செல்வது போன்ற வேறு வகையான டைம்டிராவல் எனும் போது வாதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. ஏனென்றால் பலர் கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமே என்று நினைக்கவில்லை.

பயணிப்பது கவனம்

பயணிப்பது கவனம்

குறைந்தபட்சம் மக்கள் கடந்த காலத்திற்கு பயணிப்பது கவனம் செலுத்த வேண்டுமென்ற முக்கிய முன்மொழிவிற்காக வார்ம்ஹோல் என்று அழைக்கப்படும் விசித்திரமான கருத்தை பயன்படுத்துகிறது. வார்ம் ஹோல் உண்மையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துறையில் உள்ள எல்லாவற்றின் மீதும் தனது பெயர் இருக்க விரும்பியிருப்பார் போல.

வார்ம்ஹோல்

வார்ம்ஹோல்

இது ஒரு பாலம், நீங்கள் விரும்பினால், ஒரு இடம் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லலாம். இங்கே இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல ஒரு குறுக்குவழியை கொடுக்கும் ஒரு சுரங்கப்பாதை தான். அவர் 1935 இல் இதை கண்டுபிடித்தார், ஆனால் ஒரு வார்ம்ஹோல் வாயிலை நீங்கள் பயன்படுத்தினால் - ஒரு கறுப்பு துளைக்கு அருகே வைத்து அல்லது அதிவேக பயணத்தை மேற்கொண்டால் - இந்த வார்ம்ஹோலின் இரண்டு வாயிலின் நேரங்களும் ஒரே விகிதத்தில் இருக்காது. எனவை நீங்கள் இந்த சுரங்கப்பாதை வழியாக சென்றால், இன்னொரு இடத்திற்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மட்டும் செல்லாமல் , ஒரு நேரத்தில் இருந்து வேறொரு நேரத்திற்கும் நீங்கள் செல்லலாம். ஒரு வழியாக சென்றால் கடந்த காலத்திற்கும், வேறு வழியில் எதிர்காலத்திற்கும் பயணம் செய்யமுடியும்.

 முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை

முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை

இப்போது மீண்டும், வார்ம்ஹோல் என்பது உண்மையா என நமக்கு தெரியாது. உண்மையாக இருந்தாலும் அதன் வழியாக பயணிக்க முடியுமா எனவும் நமக்கு தெரியாது. எனவே, இங்கே எல்லாவிதமான நிச்சயமற்ற தன்மைகளும் உள்ளன. கடந்த காலத்திற்கு ஒரு வார்ம்ஹோல் வழியாக ஒரு சுழல்காற்று பயணத்தை நீங்கள் உண்மையில் போகமுடியாது என நம்மில் பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் அது இன்னும் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
There are 2 types of time travel and physicists agree that one of them is possible : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X