பின்புறம் 3 கேமரா லென்ஸ் ஆதரவுடன் களமிறங்கும் ஒப்போ ஆர்17 ப்ரோ.!

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் 4கேமரா மற்றும் 3கேமரா ஆதரவுகளுடன் தான் வெளிவருகிறது, அதேபோன்று இந்தஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 3கேமரா லென்ஸ் ஆதரவு உள்ளது.

|

ஒப்போ இந்த வரும் முழுவதும் பல்வேறு புதிய அதநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது, மேலும் இந்த வருட இறுதிக்குள் ஒரு சில ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி அந்நிறவனம் தற்சமயம் புதிய முயற்சியாக 3 கேமரா லென்ஸ் கொண்ட ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் மாதம் 1-வாரத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்புறம் 3 கேமரா லென்ஸ் ஆதரவுடன் களமிறங்கும் ஒப்போ ஆர்17 ப்ரோ.!

டிஎல்ஆர் கேமராவை விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒப்போ ஆர்17 ப்ரோ கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது, பின்பு வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது என்று கூறவேண்டும். பின்புVOOC Flash சார்ஜ் வசதி கொண்டு ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக நேரம் வரை இன்டர்நெட், வீடியோ போன்ற
பல வசதிகளை அனுபவிக்க முடியும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் சார்ஜ் போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒப்போ நிறுவனம். பின்பு இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

3டி ஃபோக் கண்ணாடி

3டி ஃபோக் கண்ணாடி

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகள்
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3டி ஃபோக் கண்ணாடி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே பார்வைக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பின்புறம் 3கேமரா லென்ஸ்:

பின்புறம் 3கேமரா லென்ஸ்:

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் 4கேமரா மற்றும் 3கேமரா ஆதரவுகளுடன் தான் வெளிவருகிறது, அதேபோன்று இந்த
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 3கேமரா லென்ஸ் ஆதரவு உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும். பின்பு துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போன் பெரிதும் உதவியாக இருக்கும் என அந்நிறவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான சார்ஜ் வசதி:

அட்டகாசமான சார்ஜ் வசதி:

SuperVOOC Flash சார்ஜ் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் சார்ஜ் பற்றிய கவலை இல்லை, விரைவில்
சார்ஜ் ஆகும் தன்மை மற்றும் நீண்ட சார்ஜ் இருப்பு வசதி உள்ளது. எனவே வீடியோ கேம், ஆப், வீடியோ போன்ற பல்வேறு வசதிகளை இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இதுபோன்ற வேகமாக சார்ஜ் ஆகும் வசதி கொண்ட அம்சத்தை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை
ஜெர்மனியில் ரெயின்லேண்ட் ஆய்வகத்துடன் ஒத்துழைத்த ஒப்போ நிறுவனம் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் திட்டங்களில் கடுமையான
பாதுகாப்பு சோதனைகளை நடத்தி வந்தது, வேகமான சார்ஜிங் வேக சோதனைகளைத் தொடரும் அதே வேளை, தயாரிப்பு
பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளித்துள்ளது ஒப்போ நிறுவனம் . அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனை வேகமாகவும் இயக்க
முடியும், அதற்கு தகுந்த மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் மிக அருமையா இயக்க முடியும், அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 ஹாட் ப்ளாக்கிங் மற்றும் சப்ளைஸ் சோதனைகள் இந்த ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது நடத்தப்பட்டுள்ளது,
அதன்படி அனைத்திலும் சிறந்த செயல்திறன்கள் மற்றும் வேகமாக இயங்கும் தன்மை போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

40சதவீதம்

40சதவீதம்

நிறுவனத்தின் வியக்கத்தக்க தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட வேகத்தை நன்றாக புரிந்து கொள்வதற்காக, ஜெர்மனியிலுள்ள ரெயின்லாந்து ஆய்வு நடத்தி சார்ஜிங் வேகம் குறித்து சான்றிதழ் கொடுத்தது, அதில் வெறும் 10 நிமிடங்களில் 40% சார்ஜ் ஆகும் வசதியை கொண்டுள்ளது ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும்
இந்த ஸ்மார்ட்போன் மிகவும் பாதுகாப்பானது, அதே சமயம் உறுதியானது என்று தான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி
இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த பயனர் அனுபவம் ஒப்போ ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோன் பயனருக்கும் ஒரு சிறந்த பயனர் அனுபவத்திற்கான அடுத்த-நிலை விரைவான சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கும் என்பதை என்பதை உறுதி செய்கிறது. VOOC ஃப்ளாஷ் பொறுப்பு காப்புரிமை உரிமத்தை
நிறைவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இந்த ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்திய சந்தையில் கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வெற்றி பெரும் என்று அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து.

Best Mobiles in India

English summary
The upcoming OPPO R17 Pro will redefine flagship smartphone experience: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X