Home
Mobile

2017 : சிறந்த டாப் 5 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்:

இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் பொதுவாக 6ஜிபி ரேம் முதல் 8ஜிபி ரேம் வரை இடம்பெறும், மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும்.

By Prakash

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அதிகம் அறிமுகப்படுத்தப்படுகின்றன, மேலும் இவற்றில் உள்ள டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஸ்னாப்டிராகன் 835 செயலி போன்ற பல்வேறு வசதிகள் அருமையாக இருக்கும். சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படும்.

இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் பொதுவாக 6ஜிபி ரேம் முதல் 8ஜிபி ரேம் வரை இடம்பெறும், மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும். அதன்பின் நினைவகம் சற்று அதிகமாக இருக்கும் தன்மை கொண்டவை இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்.இப்போது சிறந்த டாப் 5 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை பின்வரும் ஸ்லைடர்களில் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 6ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எஸ் பென், முழுமையான ஒரு பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆப்பிள் ஐபோன்-க்கு நிகராக உள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன், மேலும் விளையாட்டு வசதிகள் மற்றும்ஆப் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்.

நோக்கியா 8:

நோக்கியா 8:

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, வீடியோ போன்றவற்றை துள்ளியமாக பார்க்க முடியும். பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்ஜி வி30:

எல்ஜி வி30:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் வைட் லெனஸ் இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் க்யுஎச்டி டிஸ்பிளே இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மல்டிமீடியா மற்றும் தனித்துவமான பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் 8 வரும் செப்டம்பர் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த ஐபோன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதனுடன் ஐபோன்7எஸ் மற்றும் ஐபோன்7எஸ் பிளஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் 8 அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 836 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
The top 5 flagship phones coming to India in 2017 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X