Home
Mobile

வாட்ஸ்அப் செயலியில் உள்ள அம்சங்களை அப்படியே காப்பி அடித்து அறிமுகம் செய்யும் சிக்னல்.!

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனாலும் பெரும்பலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

காப்பி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது சிக்னல்

காப்பி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது சிக்னல்

அதேபோல் எலான் மஸ்க் அவர்கள் சிக்னல் ஆப் பயன்படுத்துவது நல்லது என்று கூறியதால், அந்த செயலியும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிக்னல் ஆப் இன்னும் அதிக பயனர்களை ஈர்க்க பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.அதாவது வாட்ஸ்அப்-ல் இருக்கும் அம்சத்தை காப்பி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது சிக்னல் நிறுவனம்.

சமீபத்திய அப்டேட்

சமீபத்திய அப்டேட்

அதன்படி சிக்னல் ஆப்பின் சமீபத்திய அப்டேட் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்பிடம் இருந்து காப்பி அடித்து இரண்டு புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

சிக்னல் ஆப் ஆனது இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கான 5.3 வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இதுசாட் வார்பேப்பர் மற்றும் அனிமேஷன் அம்சங்களை கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த அம்சங்கள் வாட்ஸ்அப் போன்றே உள்ளன.மேலும் அதே அனுபவத்தை கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் சாட் வால்பேப்பர்

அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் சாட் வால்பேப்பர்

அதேபோல் சிக்னல் வழங்கும் சில அம்சங்கள் வாட்ஸ்அப் உடன் ஒற்றுப்போகிறது. அதாவது லாக் ஸ்க்ரீன், க்ரூப் கால், பின் சாட்ஸ் போன்றவை இரண்டு செயலிகளிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லிஸ்டில் இப்போது அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் சாட் வால்பேப்பர் சேருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த அடையாளத்தை இழந்து வருகிறது

சொந்த அடையாளத்தை இழந்து வருகிறது

வாட்ஸ்அப் உள்ள அம்சங்களை சிக்னல் செயலி அப்படியே காப்பி அடித்து அறிமுகம் செய்வதால், சிக்னல் அதன் சொந்தஅடையாளத்தை இழந்து வருகிறது.

அனிமேஷன் சிக்னல் ஸ்டிக்கர் பேக்

அனிமேஷன் சிக்னல் ஸ்டிக்கர் பேக்

மேலும் இப்போது அறிமுகமான சிக்னல் ஆப்பின் புதிய அம்சங்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுகும் கிடைக்கிறது. பின்பு இந்நிறுவனம் "டே பை டே" என்ற முதல் அதிகாரப்பூர்வ அனிமேஷன் சிக்னல் ஸ்டிக்கர் பேக்கையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் செயலி

டெலிகிராம் செயலி

அதேபோல் டெலிகிராம் செயலி ஆனது அண்மையில் அதன் வெர்ஷன் 7.4இல் ஒரு புதிய டூல்-ஐ சேர்த்துள்ளது. இந்த டூல் பயனர்கள் தங்கள்
வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை டெலிகிராம் ஆப்பிற்கு எளிதாக நகர்த்த உதவுகிறது.

Best Mobiles in India

English summary
The signal boldly copied two popular WhatsApp features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X