Home
Mobile

எச்டிசி விவிட் விக்கெட்டை சாய்க்குமா சாம்சங் ஸ்கை ராக்கெட்!

By Super

எச்டிசி விவிட் விக்கெட்டை சாய்க்குமா சாம்சங் ஸ்கை ராக்கெட்!
பல ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் அதில் அதிக வசதி கொண்ட மொபைல் என்று ஒப்பிட்டு பார்ப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இங்கு வாடிக்கையாளர்களின் பார்வைக்காக எச்டிசி விவிட் மற்றும் சாம்சங் எஸ்-II ஸ்கைராக்கெட் மொபைல்கள் பற்றி ஒரு சிறிய ஒப்பீடு.

ஸ்மார்ட்போன் என்றால் அது பெரும்பாலும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இந்த வரிசையில் எச்டிசி விவிட், கேலக்ஸி எஸ்-II ஸ்கைராக்கெட் மொபைல்கள் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களின் திரை வசதியிலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் 4.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொடுக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்-II மொபைல் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தையும், எச்டிசி விவிட் மொபைல் 540 x 960 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கும்.

எச்டிசி விவிட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்-II ஆகிய இரண்டு மொபைல்களிலும் டியூவல் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு கேமராவில் ஒன்று 8 மெகா பிக்ஸல் கேமராவாகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-II ஸ்மார்ட் மொபைலில் டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். எச்டிசி விவிட் மொபைலில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல்-கோர் கியூவல்காம் ஏபிகியூ8060 பிராசஸரும் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செடும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

எச்டிசி மொபைலில் 16ஜிபி, 32ஜிபி என்று இரண்டு இன்டர்னல் மெமரி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்-II ஸ்கைராக்கெட் மொபைல் 16ஜிபி மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும். ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களிலுமே 32ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியை கொண்டுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த இரண்டு மொபைல்களும், விலையிலும் உயர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எச்டிசி விவிட் ஸ்மாரட் மொபைல் ரூ.30,000 விலையில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்-II ஸ்கைராக்கெட் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன் விலையை ஒத்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X