ஒப்போ ரெனோ10 5ஜி ஒப்பிடமுடியாத கேமராக்கள் மற்றும் வேகமான செயல்திறனுடன் தனித்து நிற்கிறது!

இந்த சீசனில் ரெனோ10 சீரிஸ் மிகவும் பிரபலமான வெளியீடுகளில் ஒன்றாகும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ரெனோ 10 சீரிஸ் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. அதாவது அனைத்து அம்சங்களும்
இந்த போன்களில் உள்ளன. குறிப்பாக ஒப்போ ரெனோ 10 5ஜி இந்தியாவில் ரூ.35,000-க்கு கீழ் கிடைக்கிறது. அதேபோல் எந்த ஸ்மார்ட்போனும் இதுவரை வழங்காத கேமரா அம்சங்களை கொண்டு ஒப்போ ரெனோ 10 5ஜி மாடல் வெளிவந்துள்ளது.
தனித்துவமான டிஸ்பிளே, ஒப்பிடமுடியாத டெலிஃபோட்டோ கேமரா, மேம்பட்ட செயல்திறன் மற்றும் சிறந்த பேட்டரி செயல்திறன் வரை ஒப்போ ரெனோ 10 5ஜி ஆனது தனித்து நிற்கிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒப்போ ரெனோ 10 5ஜி போனுடன் நாங்கள் சிறிது நேரம் செலவிட்டோம். குறிப்பாக இந்த போன் ஒரு தனித்துவமான அனுபவத்தை தருகிறது. அதேபோல் ஒப்போ ரெனோ10 5ஜி ரூ.32,999-விலையில் பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கடைகளில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

தனித்து நிறக்கும் வடிவமைப்பு!
அற்புதமான நிறங்களில் இந்த ஒப்போ ரெனோ10 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது ஐஸ் புளூ மற்றும் சில்வரி கிரே நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஸ் புளூ நிறம் கொண்ட ஒப்போ ரெனோ10 5ஜி மாடல் மேட் எபெக்ட்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே கண்டிப்பாக ஐஸ் புளூ நிறம் கொண்ட வேரியண்ட் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் சில்வரி கிரே நிறம் கொண்ட மற்றொரு வேரியண்ட் மென்மையான உலோக அமைப்பை உருவாக்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்த வடிவமைப்பு மற்றும் நிறம் போன்றவற்றிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். மேலும் ஒப்போ ரெனோ10 5ஜி க்ளோ ஃபினிஷையும் கொண்டுள்ளது, இது பார்வைக்கு பிரமிக்க வைக்கிறது மற்றும் வசதியாக இருக்கிறது, அதே நேரத்தில் கைரேகை கறைகள் மற்றும் அழுக்குகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
இந்த போனின் பின்புற பேனலில் உள்ள புதிய தனிப்பயன் கேமரா மேட்ரிக்ஸ் புதுமையான இரண்டு-பகுதி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது மேல்பகுதியில் ஒரு கேமராவும், கீழே இரண்டு கேமராக்களும் கொண்டுள்ளது இந்த போன். இதில் மேல் பகுதியில் சிடி பேட்டர்ன் மெட்டல் ஃபினிஷ் உள்ளது, அதேபோல் பிரைமரி கேமரா ஃபிளாஷ் மாட்யூலைக் கொண்டுள்ளது. குறிப்பாக உயர் தெளிவுத்திறன் கொண்ட 32எம்பி டெலிஃபோட்டோ போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.
வெறும் 7.9எம்எம் மற்றும் 185 கிராம் எடை கொண்ட ஒப்போ ரெனோ10 5ஜி ஆனது 56 டிகிரி வளைந்த டிஸ்பிளே மற்றும் 3டி டூயல் வளைந்த வடிவமைப்பு உடன் அருமையான பிடியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், போனை மிகவும் மெல்லியதாகக் காட்டவும் செய்கிறது. குறிப்பாக இதன் எடை குறைவாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது.

திகைப்பூட்டும் டிஸ்பிளே அனுபவம்!
அதாவது மற்ற போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் இந்த ஒப்போ ரெனோ10 5ஜி போன். அதாவது இந்த போன் 6.7-இன்ச் அமோலெட் 3டி வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு இருப்பதால் இதன் டிஸ்பிளேவை வேகமாக இயக்க முடியும். அதேபோல் 2412x1080 பிக்சல்ஸ், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ ரெனோ 10 5ஜி போனின்ன துடிப்பான டிஸ்பிளே எச்டிஆர் 10 பிளஸ் சான்றிதழைக் கொண்டுள்ளது. இது சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் டிஸ்பிளே கீறல்களிலிருந்து பாதுகாக்க ஒப்போ கடினமான டிராகன்ட்ரெயில்டிஎம் ஸ்டார் 2 கண்ணாடியைப் பயன்படுத்துகிறது. பின்பு ஒப்போ ரெனோ 10 5ஜி போனின் பின்புற பேனல் மிகவும் கடினமான கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

உங்களை ஒரு நிபுணராக மாற்றும் கேமராக்கள்!
ரெனோ10 5ஜி ஆனது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 20எக்ஸ் டிஜிட்டல் கொண்ட தொழில்முறை 32எம்பி டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமராவுடன் வருகிறது. இந்த கேமராவில் ஒரு பெரிய ஆர்ஜிபிடபுள்யூ ஐஎம்எக்ஸ்709 சென்சார், 1/2.74 இன்ச் லைட்-சென்சிங் சர்ஃபேஸ் மற்றும் 0.8um பிக்சல் பிட்ச் உள்ளது. ஒப்போ இந்த விலைப் பிரிவில் தொழில்துறையின் உயர் தெளிவுத்திறன் கொண்ட டெலிஃபோட்டோ கேமராவை பேக் செய்துள்ளது. இந்த டெலிஃபோட்டோ கேமராவானது குறைந்தபட்சம் 25 செமீ ஃபோகஸிங் தூரத்துடன் போர்ட்ரெய்ட்களை படம்பிடிக்க உதவுகிறது. மேலும் 47 மிமீ ஃபோக்கல் நீளத்தில் (2 எக்ஸ் ஜூமில்) கிளாசிக் 50 மிமீ லென்ஸ் வரம்பில் ப்ரோ-கிரேடு போர்ட்ரெய்ட் ஷாட்களையும் உருவாக்குகிறது.
இந்த கேமராவுக்கு ஏஎல்டி ஆன்டி-ரெஃப்ளெக்ட்டிவ் கோட்டிங்கும் உள்ளது. இது பச்சை மற்றும் சிவப்பு பிரதிபலிப்புகளை தடுக்கிறது, ஒளி பிரதிபலிப்புத்தன்மையை 70% குறைக்கிறது, அதே நேரத்தில் பிஜி ஸ்பின்-கோட்டிங் செயல்முறை ஆனது அகச்சிவப்பு ஒளி உறிஞ்சப்படுவதை உறுதிசெய்கிறது, தவறான ஒளி மற்றும் பிரபதிலப்புகள் இல்லாத மிகவும் தூய்மையான மற்றும் இயற்கையான புகைப்படங்களை உறுதி செய்கிறது.
இதன் கேமரா செட்டப்பில் 64எம்பி அல்ட்ரா-க்ளியர் ப்ரைமரி கேமராவும் உள்ளது. கூடவே 112-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8எம்பி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. இந்த நம்பமுடியாத கேமரா செட்டப் (நாங்கள் அதை சிறிது நேரம் சோதித்தோம்) இருண்ட சூழலில் நாங்கள் படமெடுக்கும் போது கூட ஒவ்வொரு விவரத்தையும் சிறந்த தெளிவுடன் படம் பிடிக்கிறது. மெயின் கேமராவானது 4கே வீடியோ ரெக்கார்டிங்கை செய்கிறது. இது உங்கள் விலாக்களுக்கான சிறந்த விவரங்களை பதிவுசெய்யும்.
மிகவும் திறமையான செல்பீ ஷூட்டர் இல்லாமல் எந்தவொரு ரெனோ போனும் முழுமையடையாது. அப்படியாக ரெனோ10 5ஜி ஆனது எஃப்/2.4 அபெர்க்ஷர் உடன் கூடிய 32எம்பி ஓவி32சி சென்சாரை கொண்டுள்ளது, இது 22மிமீ ஈக்வெலென்ட் போர்ட்ரெய்ட் செல்பீகளை எளிதாக்குகிறது.

உங்களை ஒருபோதும் வீழ்த்தாத செயல்திறன்!
ரெனோ10 5ஜி ஆனது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7050 மொபைல் பிளாட்ஃபார்மில் இயங்குகிறது, இது 2.6ஜிகாஹெர்ட்ஸ் சிபியு வேகத்துடன் 6என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் அதன் விலைப் பிரிவில் 5ஜி இணைப்புடன் கூடிய வேகமான செயல்திறனை உறுதி செய்கின்றன. ரெனோ10 5ஜி ஆனது ஒப்போவின் டைனமிக் கம்ப்யூட்டிங் இன்ஜினையும் உள்ளடக்கியது, இது கூகுளுடன் இணைந்து செயல்படும் சிஸ்டம்-லெவல் ஆப்டிமைசேஷன்களின் சீரீஸ் ஆகும். கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் ரேம் எக்ஸ்டென்ஷன் அம்சமும் உள்ளது, இது செயல்திறனை அதிகரிக்க 8ஜிபி வரை பயன்படுத்தப்படாத இன்ஃபிளாஷ் ஸ்டோரேஜை தற்காலிக ரேமாக மாற்றுகிறது.
ஒப்போவின் ஆய்வகங்களில் 48-மாத ப்லுயன்சி ப்ரொடெக்ஷனை அடைவதற்காகவும், குறைந்தது நான்கு வருடங்களுக்கு மென்மையான செயல்திறனை உறுதிசெய்யும் வகையில், இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் ஆனது தொடர்ச்சியான மற்றும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங்கில் புதிய பெஞ்ச்மார்க்!
இந்த ஓப்போ ரேனோ 10 5ஜி போனானது, 67W சூப்பர்வூக்டிஎம் ஃபிளாஷ் சார்ஜிங் மூலம், 47 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் கொடுத்து, சார்ஜிங் அனுபவத்தில் முன்னணியில் இருக்கிறது. உங்களுக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை என்றாலும், 30 நிமிடங்களில் 5000mAh பேட்டரியை அதிகபட்சம் 70 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதை நிரூபிக்க சோதனை செய்து பார்த்ததில், அந்த போன் 2 நிமிடங்களில் 15 சதவீதம் சார்ஜ் செய்யப்பட்டது. இது 3 மணி நேரம் யூடியூப் பார்பதற்கு போதுமானது. இந்த பேட்டரி முதல் 15 நிமிடங்களில் 35 சதவீத சார்ஜிங் மற்றும் 30 நிமிடங்களில் 69 சதவீத சார்ஜிங் ஆகிறது. அதன்பின்பு டிரிக்கிள் சார்ஜிங் முறைக்கு சென்று, முழு சார்ஜ் செய்ய 47 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இது நம்மில் பெரும்பாலானோர் வேலைக்கு தயாராகும் நேரத்தை விட குறைவாகும். இதனால் பேட்டரி கவலை முடிந்துபோன விஷயமாக இருக்கும்.
இதுக்கும் மேல், ஒப்போ ரெனோ 5ஜி போன் கடினமான சூழ்நிலைகளிலும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சார்ஜிங்கை கொடுக்கிறது. இது ஃப்ரீஸ் ப்ரொடெக்ஷன் அல்காரிதம் கொண்டுள்ளது. இது பேட்டரியை கடினமான நிலைகளில் இருந்து பாதுகாக்கிறது. அதாவது 20 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை நிலையான சார்ஜிங் அனுபவத்தை உறுதி செய்கிறது.
இந்த ரெனோ10 5ஜி போனானது, ஒப்போவின் பிரத்யேக பேட்டரி ஹெல்த் எஞ்சினை கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் ஆயுட்காலத்தை 1,600 முறை சார்ஜிங் செய்துகொள்ளும் வகையில் நீட்டிக்கிறது. இது நான்கு ஆண்டுகள் வரை போனை நல்ல கன்டிஷனில் வைத்துக்கொள்ள போதுமானது.
உண்மையில், இந்த பேட்டரி ஹெல்த் எஞ்சின், சீல் பிசினஸ் சஸ்டைனபிலிட்டி அவார்ட் வென்றுள்ளது. இது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சஸ்டைனபிலிட்டியை மேம்படுத்தும் ஒப்போவின் முயற்சிகளுக்கு மேலுமொரு சர்வதேச அங்கீகாரத்தைச் சேர்த்தது. இது, போன் பாக்ஸில் இருந்து சார்ஜரை நீக்குவதை விட சுற்றுச்சூழலைக் காப்பாற்ற சிறந்த வழியாகும்.

கலர்ஓஎஸ் 13.1 ஆனது தடையற்ற கனெக்டிவிட்டி மற்றும் உயர்தர செயல்திறனை உறுதி செய்கிறது!
தடையற்ற உற்பத்தித் திறன் கொண்ட உலகில் அடியெடுத்து வைக்க, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 உடன் ஃப்ளுயிட் கலர்ஓஎஸ் 13.1 யூஐ கட்டமைக்கப்பட்டுள்ளது. புதுமையான மல்டி-ஸ்கிரீன் கனெக்ஷன், உங்கள் ஸ்மார்ட்போனை மற்ற டிவைஸ்களுடன் சிரமமின்றி இணைக்கிறது. ஒரே நேரத்தில் பல டிஸ்பிளேக்களில் சிரமமின்றி வேலைகள் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. மிகவும் முக்கியமான தகவல்களான, ப்ரொபைல் போட்டோக்கள் மற்றும் சாட் ஸ்கிரீன் ஷாட்களில் உள்ள பெயர்கள் உள்ளிட்டவை தானாகவே பிக்சலேட் செய்யப்படுகின்றன. இது, உங்களது தனிப்பட்ட டேட்டாக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. இதன், ஸ்மார்ட் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளேவானது, மியூசிக் பிளேபேக்கை கன்ட்ரோல் செய்யவும், உங்கள் மொபைலை அன்லாக் செய்யாமலேயே சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற பிரபலமான உணவு டெலிவரி ஆப்களை பயன்படுத்தவும் கூடுதல் செயல்பாட்டை கொண்டிருக்கிறது.
இந்த ரெனோ10 5ஜி போனானது, விலைமதிப்பற்ற இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், ஏர் கண்டிஷனர், டிவி மற்றும் பாரம்பரியமாக ரிமோட் தேவைப்படும் மற்ற டிவைஸ்கள் உட்பட வீட்டில் உள்ள பல்வேறு அப்ளையன்ஸ்களை கமெண்ட் செய்ய உதவியாக இருக்கும்.

எங்களது முடிவு!
ஓப்போ ரெனோ10 5ஜி சற்று குறைவான விலையில் பிரீமியம் சலுகையை உணர்த்துகிறது. இது தொழில்துறையின் முன்ணணி ப்ரொபஷனல் கேமரா அனுபவத்துடன், 32 எம்பி டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமரா, அதிவேகமான 67W சூப்பர்வூக்டிஎம் சார்ஜிங் மற்றும் நீண்ட ஆயுளுக்கு மதிப்பிடப்பட்ட மிகுந்த ஆற்றல் கொண்ட செயல்திறனை பேக் செய்கிறது. இவை அனைத்தும் கூட்டத்தில் தனித்து நிற்கும் வடிவமைப்பை கொண்டுள்ளன. ஓப்போ ரெனோ10 5ஜி ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராகும்.
ஒப்போ ரெனோ10 5ஜி போனின் 8 ஜிபி ரேம் +256 ஜிபி மாடலின் விலை ரூ.32,999 ஆகும். ஐஸ் புளூ மற்றும் சில்வரி கிரே ஆகிய இரண்டு கலர்களில் இந்த போன் கிடைக்கிறது. மேலும், இது ஏற்கனவே பிளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெய்லர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஓப்போவானது, வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களுடனான டை-அப்களில், நோ-காஸ்ட் இஎம்ஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் கேஷ்பேக் மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது.




Click it and Unblock the Notifications








