ஐபோன்களுக்கு ஆப்பு ரெடி; ஒன்ப்ளஸ் 5 வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

|

ஐபோன்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 5 ஆனது இந்த மாதம் வெளியாகிறது. ஒன்ப்ளஸ் நிறுவனம் இன்று அதன் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனை முறையாக வரும் ஜூன் 20-ஆம் தேதி அன்று 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஐபோன்களுக்கு ஆப்பு ரெடி; ஒன்ப்ளஸ் 5 வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

வழக்கம்போல இந்த வெளியீட்டு நிகழ்வும் ஆன்லைன் ஸ்ட்ரீம் செய்யப்படும். அதற்கு பின்னர், உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பாப் அப் நிகழ்வுகள் இருக்கும். உதாரணமாக, நியூ யார்க் நகரில் ஜூன் 20-ஆம் தேதி நிகழ்வில் ஒன்ப்ளஸ் சிஇஓ கார்ல் பெய் மற்றும் மார்கஸ் ப்ரவுன்லீ ஆகியோர்கள் கலந்துகொள்வர். இதுதவிர்த்து அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பல பாப் அப்களை ஜூன் 21-ஆம் தேதி நடத்த நிறுவனத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்கள் போலவே, ஒன்ப்ளஸ் 5 ஆனது சாம்சங், கூகுள், எல்ஜி மற்றும் பிற ஆண்ட்ராய்டு தொலைபேசி தயாரிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் முக்கிய சாதனங்களைக் காட்டிலும் கணிசமான அளவுக்கு அதிக விலை உயர்ந்த வன்பொருள் விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் என்று லீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் கேமராவின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு டிஎக்ஸ்ஓ (DxO) உடன் இணைந்து ஒன்ப்ளஸ் பணியாற்றி வருகிறது. மேலும் அதன் அடுத்த தயாரிப்புக்கு முன்னதாக அதன் வாடிக்கையாளர் சேவை சார்ந்த நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் இந்த ஒன் ப்ளஸ் சாதனமானது, மிட்ரேன்ஜ் விலை அடுக்கு கொண்ட மற்றும் ஒரு புதிய நுழைவான மோட்டோ இசெட்2 போன்ற கருவி மூலம் நெருக்கடிகளை பெறலாம். ஆனால் மறுகையில் ஐபோன்களை ஒரு வழி செய்துவிடும் என்பதும் உறுதி. இருப்பினும் தலைமை பிரிவில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ராய்டு ரசிகர்கள் இக்கருவியை வெற்றி பெறச்செய்வர் என்று நிறுவனம் நம்புகிறது மற்றும் அதன் முயற்சியை காணவும் முடிகிறது. சரி ஜூன் 20-ஆம் தேதி வரை சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
The OnePlus 5 will be unveiled on June 20th. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X