நோக்கியா 8 மாடல் ரூ.30,000 விலைக்கு தகுதிதானா?

|

கடந்த 2017ஆம் ஆண்டு ஆச்சரியத்தக்க வகையில் நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன் மார்க்கெட்டில் நவீன சீரிஸ் பெயர்களில் நுழைந்தது. ஆனால் அதே நேரத்தில் நோக்கியோ அறிமுகம் செய்த மாடல்களின் விலை அதிகமாக இருந்ததாலும், பட்ஜெட் விலையில் இல்லை என்பதாலும் வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்தது. நோக்கியா 8 மாடலின் விலை இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் வாங்கினால் ரூ.36999 என்பது ஆகும். அதிநவீன வசதிகள் மற்றும் ஆச்சரியத்தக்க வகையில் டிசைன்கள் இருந்ததால் இந்த மாடல் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் என்றே நோக்கியா எதிர்பார்த்தது. ஆனால் இந்த மாடல் குறைந்த அளவே வரவேற்பை பெற்றது. இதனால் நோக்கியா கடும் அதிர்ச்சி அடைந்தது. அதன் பின்னர் திடீரென விலையை ரூ.8000 குறைத்து அதன் விலை ரூ.28999 என நிர்ணயம் செய்தது.

நோக்கியா 8 மாடல் ரூ.30,000 விலைக்கு தகுதிதானா?

நோக்கியா தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்து வரும் HMD நிறுவனம் நோக்கியாவின் இந்த மாடலை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டியது. மேலும் விலை மட்டுமே இந்த மாடலை நிர்ணயம் செய்வதில்லை என்றும் அதன் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மேன்மைகளை குறிப்பாக ஆண்ட்ராய்டு பிரிவில் உள்ள சிறப்பான அம்சங்களையும், டிசன் மற்றும் அதிநவீன ஹார்ட்வேர் அம்சங்களும் இந்த மாடலில் உள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைத்தது.

நோக்கியாவின் இந்த மாடல் குறித்து இந்த மாடல் 2017ஆம் ஆண்டுக்கான புதுமையான மாடல் என்றும், 18:9 டிஸ்ப்ளே என்பது குறிப்பிடத்தக்க அம்சம் என்று கூறினாலும் ரூ.28999 கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த போனில் பெரிதாக இல்லை என்றே கூறினர். இதன் பின்னர் நோக்கியா தீவிரமாக சிந்தித்து அதுவரை மற்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யாத சில விஷயங்களை புதுமையாக அறிமுகம் செய்தது. அதன் பயன் தான் இந்த மாடலில் ஆண்ட்ராய்டு யூஐ மற்றும் அதிநவீன ஹார்ட்வேர் அமைப்பை பெற்றது. அதுமட்டுமின்றி கூகுள் போன்கள் தவிர வேறு எந்த போனிலும் இல்லாத ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இந்த மாடலில் இடம்பெற்றது

இந்த மாடலின் ஹார்ட்வேர் பகுதி குறித்த அம்சங்கள் பல இருந்தாலும் அவற்றில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 838 அம்சம் கொண்டது ஒரு கூடுதல் சிறப்பு. இந்த சிப்செட் குவாட் எச்டி டிஸ்ப்ளேவுடன் கிடைத்தது. இதனால் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டும் பணத்திற்கு மதிப்பு உடையதாக இந்த போன் கருதப்பட்டது. இந்த நிலையில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டுடன் கூடிய போன் இவ்வளவு குறைந்த விலையில் கிடைப்பது இந்த போன் தான் என்பது மார்க்கெட்டில் சிறிது காலம் கடந்து உணரப்பட்டது.

நோக்கியா 8 மாடல் ரூ.30,000 விலைக்கு தகுதிதானா?

ஸ்னாப்டிராகன் 825 அம்சத்துடன் இந்த போனில் 4ஜிபி ரேம், 3090mAh பேட்டரி உள்ளது. மிக வேகமாக சார்ஜ் செய்வது இதன் சிறப்பு அம்சமாக இருந்தது. மேலும் 4ஜிபி ரேம் கொண்ட ஒரு போன் இவ்வளவு சிறப்பம்சங்களுடன் கிடைப்பது இதுதான் முதல் முறை என்ற பெயரையும் பெற்றது.

மேலும் இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் சாப்ட்வேர்கள் அனைத்து விரைவாக அப்டேட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தான். கடந்த ஆண்டு ஆண்ட்ராய்ட் ஓரியா அப்டேட் செய்த முதல் போன் நோக்கியா 8 என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஓரியாவை கொண்ட சாம்சங் அப்டேட் செய்ய அதிக காலம் எடுத்து கொண்ட நிலையில் மிக விரைவாக நோக்கியோ அப்டேட் செய்து கொடுத்ததால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது.

நோக்கியா 8 மாடல் ரூ.30,000 விலைக்கு தகுதிதானா?

இந்த போனின் ஒரே மைனஸ் என்றால் அது கேமிராதான். வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் கேமிரா இதில் இல்லை என்பதால் HMD விரைவில் கேமிராவை அப்டேட் செய்து தருவதாக உறுதியளித்தது. ஆனால் இன்று வரை அப்டேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் கேமிரா டூயலாக 13எம்பி அளவில், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டபிலேசனுடன் உள்ளாது. மேலும் 4K வீடியோ ரெக்கார்டிங், உள்ளது இதன் சிறப்பம்சமாக கருதப்பட்டது. செகண்டரி கேமிராவின் சென்சார்களும் புகைப்படம் எடுப்பதற்கு நல்ல வகையில் உதவி செய்கிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

அதேபோல் நோக்கியோ 8 மாடலில் உள்ள செல்பி கேமிராவும் 4K வீடியோ எடுக்கும் வகையில் நல்ல முறையில் செயல்படுகிறது. இந்த நோக்கியா 8 மாடலுடன் ஓரளவு அனைத்து வகையிலும் ஒத்து போகும் வகையில் இருக்கும் போன் ஹானர்வியூ 10 மட்டுமே என்பதும் ஒரு முக்கிய விஷயம். ஹானர் வியூ 10 மாடல் அனைத்து வகை அம்சங்களும் சிறப்பாக இருந்தாலும் குவாட் எச்ட் பேனல் விஷயத்தில் அதிருப்தியை தருகிறது.

நோக்கியா 8 மாடல் ரூ.30,000 விலைக்கு தகுதிதானா?

இந்த நிலையில் ரூ.30000 விலையில் ஒரு நல்ல தரமான போன் வாங்க முடிவு செய்பவர்களுக்கு இந்த நோக்கியா 8 மாடலின் விலையான ரூ.28999 என்பது சரியான விலையில் ஒரு நல்ல போன் என்பதே அனைவரின் எண்ணங்களாக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The Nokia 8 is the Best Smartphone to Purchase Under Rs 30000 Right Now ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X