மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வரும் நோக்கியா 6 (2018).!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 4-ஆம் நடக்கவுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 6 (2018) சாதனத்தின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நோக்கியா 6 (2018) :

நோக்கியா 6 (2018) :

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்விலைப் பொறுத்தவரை 18,999-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
The Nokia 6 2018 Will Compete With the Motorola Moto X4 in India; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X