Just In
- 3 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 4 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 5 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 6 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சியோமி, மோட்டோரோலாவிடம் இல்லாத 2 விடயங்கள் நோக்கியாவிடம் உள்ளது.!
வேட்டை ஆரம்பம், சியோமி மற்றும் மோட்டோரோலா கருவிகளை தூக்கி சாப்பிட வருகிறது.!
போட்டிபோட்டுக்கொள்ளும் ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவலுக்கு முன்பு போட்டியே இல்லாத நோக்கியாவின் கிளாஸிக் கருவியான 3310 (2017-ஆம் ஆண்டு பதிப்பு) கருவியின் இந்திய வெளியீடும் அதன் விலை நிர்ணயமும் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற தகவலை பகிர விரும்புகிறோம்.
நோக்கியா 3310 (2017) கருவியானது இந்தியாவில் வரும் மே மாதம் 18-ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும். மிகவும் சுவாரசியமாக சின்ஹா தொலைபேசியின் விலை ரூ.3310/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சரி, இப்போது மிகவும் பிரபலமாகிக்கொண்டே போகும் சியோமி ஸ்மார்ட்போன் மற்றும் முந்தைய பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களிடமும் இல்லாத இரண்டு விடயங்கள் நோக்கியாவிடம் உள்ளது. அதென்னது என்பதை பற்றி பாப்போம்.!
இரண்டு பிரத்யேக விற்பனை புள்ளி
நடப்பு இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் இடைப்பட்ட கருவிகளின் அரசர்களாக சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் (ரெட்மீ நோட் 4 மற்றும் மோட்டோ ஜி5) திகழ்கிறது. இந்நிலைப்பாட்டில் சந்தைக்குள் நுழையும் நோக்கியா ஸ்மார்ட்போன் மில்லியன் கணக்கான அலகுகள் விற்கும் உடன் போட்டி கருவிகளை சாதாரணமாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு துணையாக இரண்டு பிரத்யேக விற்பனை புள்ளிகளை நோக்கியா கொண்டுள்ளது.
பயனர் இடைமுகம் :
நோக்கியா ஸ்மார்ட்போ வரிசைகளான நோக்கியா 3, 5 மற்றும் 6 கருவிகள் அனைத்துமே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்டின் வெண்ணிலா-எஸ்க்யூ பதிப்பில் இயங்குகிறது.
மறுபுறம்
உண்மையில், நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி அற்புதமான பயனர் அனுபவத்தை வழங்கும் கூகுள் உடன் இணைந்துள்ளது. மறுபுறம், ரெட்மீ தொடர் கருவிகள் மியூ இயங்குதளத்தில் இயங்குகிறது என்பதும் அது ஆண்ட்ராய்டின் ஹெவி வெர்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் நம்பிக்கை
இப்போது நோக்கியா நிறுவனம் ஒரு பின்லாந்து பிராண்ட் அல்ல என்றாலும் கூட, 90-களில் ஆரம்பித்த அதன் ஸ்மார்ட்போன் சண்டை ஆட்சி 2000-ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான இந்தியர்களுக்கு பிடித்த நம்பகமான ஒரு பிராண்ட் என்று பெயர் வாங்கியது.
இதயத்தில் நோக்கியா
சீனச் சந்தைகள் இந்திய சந்தையில் வேகத்தை எட்டியுள்ளன என்றாலும் கூட பெரும்பாலான பயனர்களின் இதயத்தில் நோக்கியாவின் பிராண்ட் விசுவாசத்திலேயே உள்ளது என்பதை நோக்கியாவின் ஸ்மார்ட்போன் அறிமுக தினத்தன்று உணர முடிந்தது.
நோக்கியா 3
நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வரிசை கருவியான நோக்கியா 3 கருவியை பொருத்தம்மட்டில் ரூ.9824/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. பளபளப்பான நீளம், வெள்ளி, மேட் பிளாக், காப்பர் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி 5.0-இன்ச் எச்டி (1280x720p) ஐபிஎஸ் எல்சிடி திரை 2.5டி உடன் செதுக்கப்பட்டுள்ள கார்னிங் கொரில்லா கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது.
இதர சிறப்பம்சங்கள்
இயங்குதளம் : கொண்ட 1.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் (எம்டிகே 6737) உடனான க்வாட்-கோர் கொண்ட ஆண்ட்ராய்ட் 7.0 நௌவ்கட்
கூகுள் அசிஸ்டண்ட் : உண்டு
ரேம் : 2ஜிபி
சேமிப்பு : 16ஜிபி, 128ஜிபி வரை விஸ்தரிக்கலாம்
செல்பீ கேமரா : 8எம்பி
ரியர் கேமரா : 8எம்பி
பேட்டரி : 2650எம்ஏஎச்
நெட்வர்க் : 4ஜி-எல்டிஇ
நோக்கியா 5
5.2-அங்குல எச்டி (1280x720p) ஐபிஎஸ் எல்சிடி திரை 2.5டி செதுக்குதல் கார்னிங் கொரில்லா கண்ணாடி டிஸ்பிளே கொண்ட மற்றொரு ஆண்ட்ராய்டு சாதனமான நோக்கியா 5 இந்திய சந்தையில் ரூ.13,357/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் சுட்டிக் காட்டுகிறது.
இதர சிறப்பம்சங்கள்
வண்ணம் மாறுபாடு : டெம்பர்டு ப்ளூ, வெள்ளி, மேட் பிளாக், காப்பர்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டா-கோர் சிபியூ
கூகுள் அசிஸ்டண்ட் : உண்டு
ரேம் : 2ஜிபி
சேமிப்பு : 16ஜிபி, 128ஜிபி வரை விஸ்தரிக்கலாம்
செல்பீ கேமரா : 8எம்பி
ரியர் கேமரா : 13எம்பி
பேட்டரி : 3000எம்ஏஎச்
நெட்வர்க் : 4ஜி-எல்டிஇ
நோக்கியா 6
மிகவும் அதிக அளவில் எதிர்பார்ப்புக்கு உலாகியுள்ள நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ரூ.21,131/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. ஆர்ட் பிளாக் (வரையறுக்கப்பட்ட பதிப்பு), மேட் பிளாக், டெம்பீரட் ப்ளூ, சில்வர், காப்பர் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்சிடி திரை 2.5டி உடன் செதுக்கப்பட்டுள்ள கார்னிங் கொரில்லா கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது.
இதர சிறப்பம்சங்கள்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டா-கோர் சிபியூ
கூகுள் அசிஸ்டண்ட் : உண்டு
ரேம் : 3ஜிபி/4ஜிபி
சேமிப்பு : 32ஜிபி/64ஜிபி, 128ஜிபி வரை விஸ்தரிக்கலாம்
செல்பீ கேமரா : 8எம்பி
ரியர் கேமரா : 16எம்பி
பேட்டரி : 3000எம்ஏஎச்
நெட்வர்க் : 4ஜி-எல்டிஇ
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470