டூவல் கேம், 4ஜிபி ரேம், வாங்கினா ஹானர் 6 எக்ஸ் தான் வாங்கனும்.!
ஹானர் 6எக்ஸ் கருவியின் விலை மற்றும் இக்கருவி கொண்டுள்ள தனிப்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன.?
சமீப காலங்களாக பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நுழைந்த வண்ணம் உள்ளன. எல்லாமே பட்ஜெட்டின் கீழ் வருவதால் எந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உங்களுள் எழுவது சகஜம் தான்.!
ஹானர் 6எக்ஸ் கருவியை உங்களுக்கு பரிந்துரைத்து உங்களின் குழப்பத்தை தீர்த்து வைப்பதோடு ஹானர் 6எக்ஸ் கருவியின் விலை மற்றும் இக்கருவி கொண்டுள்ள தனிப்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதையும் உங்களுக்கு வழங்குகின்றோம். அவைகளையெல்லாம் தெரிந்துகொண்ட பின்னர், வாங்கினா இப்படி ஒரு ஸ்மார்ட்போனைத்தான் வாங்கனும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுவதும் சகஜமே.!

டிஸ்ப்ளே
ஹானர் 6எக்ஸ் கருவியானது நீங்கள் படம் பார்கா மற்றும் கேம்ஸ் விளையாட ஏதுவாக 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி (பிக்சல் பர் இன்ச்) கொண்ட, 1080 x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

சிப்
ஹானர் 6எக்ஸ் கருவியானது 2.1ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.7ஜிகாஹெர்ட்ஸ் உடனான நிறுவனத்தின் ஹூவாய் க்ரீன் 655 சிப் கொண்டு இயங்கும்.

சேமிப்பு
ஸ்மார்ட்போனின் சேமிப்பு திறனை பொறுத்தமட்டில் 3ஜிபி ரென் உடனான 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் உடனான 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்ற இரண்டு மாறுபாடுகளை வழங்குகிறது. மற்றும் இரண்டு வகைகளிலுமே மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரையிலாக நீட்டிப்பு வசதியும் உள்ளது.

முதன்மை கேமரா
ஹானர் 6எக்ஸ் கருவியில் கேமரா ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும் இக்கருவி ஒரு 12எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது அதாவது ஒரு இரட்டை பின்புற கேமரா கொண்டு வருகிறது. இக்கருவியின் எப் / 2.2 என ஒரு பரந்த துளை நீளம் மூலம் 1080 தர வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பீ கேமரா
உடன் ஹானர் 6எக்ஸ் ஒரு மதிப்பான செல்பீ கேமராவும் கொண்டுள்ளது அதாவது 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. உடன் இது அதிக தீர்மானம் மற்றும் அதிக தொனியிலான நிறங்கள் கொண்ட படங்களை கைப்பற்ற உங்களுக்கு உதவும்.

இணைப்பு விருப்பங்கள்
ஹூவாய் ஹானர் 6எக்ஸ் கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி, எல்டிஇ ஆதரவு மற்றும் ஜி.பி.எஸ் ஆதரவும் வழங்குகிறது.

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
உடன் ஹானர் 6எக்ஸ் கருவி 0.3 நொடிகளில் திறக்கும் கைரேகை சென்சார் ஆதரவையும் வழங்குகிறது மற்றும் ஹானர் 6எக்ஸ் கருவியின் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனை திறக்க மட்டுமினி பல செயல்பாடுகளுக்கான இயக்க நிரல்படு அம்சமாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
4ஜி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ - ரூ.3,799/-க்கு வேறென்ன வேணும்.?


Click it and Unblock the Notifications
