இதுதான் ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு!

By Jeevan
|

ப்ளாக்பெர்ரி போன்களை அதிகமாக மேல்தட்டு மக்களே பயன்படுத்துகிறார்கள். அந்த வகை போன்கள் மிகவும் விலையுயர்ந்தது என்றெல்லாம் நினைப்பவர்கள் நம்மில் அதிகம்.

உண்மையில் ப்ளாக்பெர்ரி போன்கள் சாதாரண ஸ்மார்ட்போன்களின் விலைக்கே கிடைக்கிறது. ஆனால் சற்றே விலை அதிகம்தான். விலை குறைந்த போன்களும் இருக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்.

ப்ளாக்பெர்ரி போன்கள், ஆப்பிள் போன்களின் அளவுக்கு விலை அதிகமெல்லாம் இல்லீங்கோ. எல்லாம் சரி 'ப்ளாக்பெர்ரி' போனா? அப்டீனா? என்பவர்கள் தொடரவும்.

ரிம் என்ற கனடாவை சேர்ந்த நிறுவனம்தான் ப்ளாக்பெர்ரி வரிசை போன்களை உற்பத்தியும், சந்தைப்படுத்துதளையும் செய்கிறது. முதன்முதலில் ஸ்மார்ட்போன்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் 'ரிம்' நிறுவனத்திற்கும் பெரும்பங்கு உள்ளது.

இந்த ரிம் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர்தான் ப்ளாக்பெர்ரி Z10 என்ற புதியபோனை வெளியிட்டது. தொழில்நுட்பத்தின் அனைத்து சிறப்புகளையும் மொத்தமாகக்கொண்டதே இந்த ப்ளாக்பெர்ரி Z10 போனின் சிறப்பு. இது சிலதினங்களுக்கு முன்னர் வெளியானதுதான். அப்படியானால் முதல் போன்?

முதன்முதலில் 'ஈமெயில் பேஜர்' என்ற சாதனத்தை 1999ல் வெளியிட்டது ரிம் நிறுவனம். 2000களில் பேஜர் வகை சாதனங்களே பெரிய அளவில் பேசப்பட்டவை.

இந்நிறுவனம் ப்ளாக்பெர்ரியின் 10வது கோடி போனை ஜூன் 2010ல் விற்றது என்பது கூடுதல் தகவல். மேலும் தனது 20வது கோடி போனை செப்டம்பர் 2012ல் விற்றுள்ளது.

ப்ளாக்பெர்ரி போன்கள் பெரும்பாலும் ஈமெயில் அனுப்புவதற்காகவும், உடனடி மெசேஜ்கள் அனுப்புவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. இதன் தனிச்சிறப்பு என்னவெனில், ப்ளாக்பெர்ரி வகை போன்களில் வைரஸ்கள் எதுவும் பரவாது என்பதே. ஏனெனில் இதன் இயங்குதளத்தின் வடிவமைப்பு மிகவும் சிறப்பானது.

ஐபோன், ஆன்ட்ராய்டு, விண்டோஸ் போன் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கான வரிசையில் ப்ளாக்பெர்ரியும் சிறப்பான இடத்திலேயே உள்ளது எனலாம்.

10 வருடங்களுக்கு முன்னர், பாம், டெல், ஹெச்பி, நோக்கியா, டேஞ்சர், மற்றும் ரிம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவில் முன்னிலை வகித்தவை. சாம்சங் மற்றும் HTC ஆகியவை பின்நாட்களில் சாதன பந்தையத்தில் சேர்ந்தவையே!

அந்த பத்தில் நோக்கியாவும், ரிம்மும் மட்டுமே தற்பொழுது தம்மை முன்னிலை படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்கள் தயாரிப்பில் மட்டுமே என்பதை நினைவில்கொள்க!

மேலும் ப்ளாக்பெர்ரி தான் முதன்முதலில் QWERTY வகை கிபோர்ட்களை தயாரித்தது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

ப்ளாக்பெர்ரி போன்களின் வரலாறு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X