15 மணி நேரம் டாக் டைம் கொடுக்கும் புதிய ப்ளை மொபைல்!

மொபைல்களை குவியல்களாக கொடுத்த ஃப்ளை நிறுவனம் புதியவரவாக எம்வி-282 மொபைலை உருவாக்கி உள்ளது. ஜிஎஸ்எம் வசதி கொண்ட இந்த மொபைல் 2.79 இஞ்ச் திரை வசதி கொண்டது. இது டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இந்த திரையின் மூலம் 240 X 320 பிக்ஸல் துல்லியத்தினையும் வழங்கும். இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் பயன்படுத்த எளிய நண்பன்.
பளிச்சிடும் பிம்பத்தில் ஜொலிக்கும் இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஃப்ளை நிறுவனம் எப்போதுமே பேட்டரி வசதியில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த மொபைலிலும் அப்படி தான். இதில் 2,000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதனால் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 15 மணி நேரம் டாக் டைம் வசதியினை வழங்கும்.
பொழுதுபோக்கு அம்சங்களாக இதில் எப்எம், மல்டி மீடியா ப்ளேயர் போன்ற தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்யும். நிறைய மொபைல்களில் மல்டி மீடியா ப்ளேயர் வசதி இருக்கிறது தான். ஆனால் அதன் பேட்டரி நீடித்து உழைப்பதில்லை. ஆனால் இந்த எம்வி-282 மொபைலின் பேட்டரி, பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்த ஒத்துழைக்கும். மிக கவர்ச்சிகரமான விலையில் இந்த மொபைல் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications