குழப்பம் வேண்டாம் செல்போனுக்கும் ஸ்மார்ட்போனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்!
மொபைல் சாதனங்கள் என்ற பிரிவின் கீழ் வரும் இன்றைய நுகர்வோர் மின்னணு சாதனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, செல்போன் அல்லது மொபைல் போன் என்றழைக்கப்படும் செல்லுலார் போன்கள் ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன, அது குரல்வழி தகவல்தொடர்பு மட்டுமே.

தொடர்ச்சியான மாற்றங்களுடன் தொழில்நுட்பம்
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எப்போதும் போல, மொபைல்போன், ஸ்மார்ட்போன் மற்றும் பிடிஏ போன்ற பொதுவான சொற்களை புரிந்துகொள்வதை கடினமாக்கியுள்ளன. ஏனெனில் ஒவ்வொரு வகை கருவியும் தொடர்ந்து மாறிவருகின்றன மற்றும் ஒரு வகை சாதனத்திற்கு சொந்தமான அம்சங்கள் இப்போது மற்றவற்றிலும் காணப்படுகின்றன.

மொபைல் போன்கள்
மொபைல் போன் பிரபலமாக செல்லுலார் போன் அல்லது செல்போன் என்று அழைக்கப்படுகிறது. இந்த தகவல்தொடர்பு சாதனங்கள் ரேடியோ அலைகள் அல்லது செயற்கைக்கோள் பரிமாற்றங்கள் மூலம் கம்பியில்லா தகவல்தொடர்பு வலையமைப்பில் இணைக்கின்றன.

மொபைல் போன்களின் பயன்கள்
பெரும்பாலான மொபைல் போன்கள் குரல் தகவல்தொடர்புகள், சிறு செய்தி சேவை (SMS), மல்டிமீடியா செய்தி சேவை (MMS) போன்ற வசதிகளை வழங்குகின்றன மற்றும் சில புதிய வகை மொபைல்போன்கள் இணைய உலாவல், உடனடி செய்தி பரிமாற்ற திறன் மற்றும் மின்னஞ்சல் போன்ற இணைய சேவைகளை வழங்கலாம்.

பி.டி.ஏ (பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட்)
சுருக்கமாக பி.டி.ஏ என அழைக்கப்படும் தனிப்பட்ட மின்னணு உதவியாளர் என்ற கையடக்க சாதனங்கள், கணினி, தொலைபேசி / தொலைநகல், இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க்கிங் அம்சங்களை கொண்டுள்ளது. பொதுவான பி.டி.ஏ கருவியானது, செல்லுலார் தொலைபேசி, தொலைநகல் அனுப்புநர், இணைய உலாவி மற்றும் தனிப்பட்ட அமைப்பாளராக செயல்பட முடியும்.

தொலைபேசி சேவைகள் இல்லை
பொதுவாக பேனா அடிப்படையிலான இந்த சாதனங்களில் விசைப்பலகை உள்ளீடுகளுக்கு மாற்றாக ஸ்டைலஸ் பயன்படுத்தப்படுகின்றன . தற்போதுள்ள பி.டி.ஏ சாதனங்களில் ஸ்டைலஸ் அல்லது விசைப்பலகை அம்சங்கள் கிடைக்கிறது. பாரம்பரியமான பிடிஏ சாதனங்களில் தொலைபேசி அல்லது தொலைநகல் சேவைகள் இல்லை.

ஸ்மார்ட்போன்
பாரம்பரிய பிடிஏ மற்றும் செல்லுலார் தொலைபேசியின் கலவையாக கருதப்படும் ஒரு ஸ்மார்ட்போன்களில், செல்லுலார் தொலைபேசி பகுதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கையடக்க சாதனங்களில் மொபைல் போன் திறன்களுடன், கையடக்க கணினி அல்லது பிடிஏ-ன் பொதுவான அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போன்
ஒரே சாதனத்தில் மொபைல் போன் வசதிகளை பயன்படுத்துவது மட்டுமின்றி, தகவல்களை சேமிப்பது, மின்னஞ்சல், செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது போன்ற அம்சங்களையும் உபயோகிக்க ஸ்மார்ட்போன்கள் பயனர்களை அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பொதுவாக பிடிஏ போன்ற அம்சங்கள் விட மொபைல் போன் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஸ்மார்ட்போனை வரையறுக்க தொழில் தரநிலை இல்லை என்பதால், அடிப்படை செல்போன்களை விட அதிக திறன்களை கொண்ட மொபைல் சாதனங்கள், ஸ்மார்ட்போன் என வகைபடுத்தப்படுகின்றன.

பிடிஏ போன் என்றால் என்ன?
மொபைல் சாதனங்களை வகைபடுத்த போதுமான தரநிலைகள் இல்லாதது நிச்சயமாக நுகர்வோர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது, பல்வேறு சாதங்கள் வழங்கும் சேவைகளும் மாற்றியமைக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, தொடுதிரை மூலம் மக்கள் பிடிஏ மற்றும் ஸ்மார்ட்போன்களை வித்தியாசப்படுத்தினர்.

QWERTY விசைப்பலகை
தொடுதிரை இருந்தால் பிடிஏ, இல்லையெனில் அது ஸ்மார்ட்போன். சோனி எரிக்சன் ஸ்மார்ட்போன் எடுத்துக்காட்டாக, தொடு திரை மற்றும் முழு QWERTY விசைப்பலகை ஆகிய இரண்டையும் வழங்குகிறது. உற்பத்தியாளர் இந்த தயாரிப்பை ஒரு ஸ்மார்ட்போன் என அழைக்கின்றனரே தவிர , செல்லுலார் தொலைபேசி திறன்களை கொண்ட இந்த பிடிஏ சாதனத்திற்கான பொதுவான பெயர் பிடிஏ ஃபோன் ஆகும்.

திறன்மிகு சாதனங்களுக்கு இடையேயான வேற்றுமைகள்
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனத்தை வெறுமனே செல்லுலார் தொலைபேசி, ஸ்மார்ட்போன், பிடிஏ அல்லது பிடிஏ போன் என நீங்களாகவே பெயர் நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆனால் இந்த மொபைல் சாதனங்களுக்கான இடையேயான பெயர்கள், பாக்கெட் பிசி அல்லது ஸ்மார்ட்போன் (Smartphone - Capital S) என்ற புதிய பெயர்களை சேர்க்கும்போது மீண்டும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன்
Smartphone மற்றும் smartphone இடையேயான வேறுபாடு என்னவெனில், கேபிட்டல் ஸ்மார்ட்போன் என்பது மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன் தளத்தை பயன்படுத்தும் சில மொபைல் வகைகளை குறிக்கும்.

ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான குழப்பம்
சமீபத்திய மைக்ரோசாப்ட் மொபைல் 6 பதிப்பில், Smartphone என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளதன் மூலம் இரு ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான குழப்பம் குறையும். மைக்ரோசாப்ட் மொபைல் 6-ல் ஒரு பதிப்பு "Windows Mobile 6 Standard for Smartphones" என அழைக்கப்படுகிறது. தொடுதிரை இல்லாத போன்கள் என்பதையே இது குறிக்கிறது.


Click it and Unblock the Notifications