Home
Mobile

அம்சமான வடிவமைப்பில் புதிய பிளாக்பெர்ரி மொபைல்கள்!

By Super
அம்சமான வடிவமைப்பில் புதிய பிளாக்பெர்ரி மொபைல்கள்!

புதிய ஸ்மார்போன்களை கொடுப்பதில் ப்ளாக்பெர்ரி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது என்று தாராளமாக கூறலாம், பாராட்டலாம். பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆர்வத்தை கொடுக்கும் வசதிகளை ப்ளாக்பெர்ரி மொபைல்கள் வழங்குகின்றன.

ப்ளாக்பெர்ரி கர்வ் 9370 மற்றும் கர்வ் 9870 என்ற பெயர்களில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது ப்ளாக்பெர்ரி நிறுவனம். ப்ளாக்பெர்ரி கர்வ் 9370 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. அதாவது ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தினை பெற்றிருக்கிறது.

கர்வ் 9870 மொபைல் ப்ளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கர்வ் 9370 மொபைல் 360 X 480 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும் 2.44 இஞ்ச் திரையை கொண்டுள்ளது.

இந்த இரண்டு ப்ளாக்பெர்ரி கர்வ் மொபைல்களுமே கியூவர்டி கீப்பேட் வசதியினை பெற்றுள்ளது. இதனால் பிளாக்பெர்ரி போன்களுக்கே உரிய ஒரு தனித்துவமான தோற்றத்தை பெற்றிருக்கிறது.

பொதுவாகவே ப்ளாக்பெர்ரியின் மொபைல்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர் பார்க்கின்றனர். ஏனெனில் இந்த நிறுவனத்தின் மொபைல்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கின்றது.

தொடுதிரை வசதி கொண்ட மொபைல்களை பயன்படுத்த மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த இரண்டு கர்வ் மொபைல்களுமே தொடுதிரை வசதியையும் கொண்டிருக்கின்றன. கர்வ் 9370 மற்றும் 9870 மொபைல்களில் வைபை, ஜிபிஎஸ் போன்ற வசதிகளும் இருக்கின்றன.

இந்த இரண்டு ப்ளாக்பெர்ரி மொபைல்களில் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.

இந்த மொபைல்கள் கறுப்பு மற்றும் சில்வர் நிறத்தில் அழகாகவும், கண்களை கவரும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல தொழில்நுட்ப வசதிகளை இந்த ப்ளாக்பெர்ரி கர்வ் 9370 மற்றும் 9870

மொபைல்கள் உள்ளடக்கி இருக்கிறது என்று கூறலாம்.

இந்த புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களில் அப்ளிகேஷன்களை இயக்குவதும், கையாள்வதும் மிக எளிதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X