Home
Mobile

ரூ.44,500 விலையில் இந்தியாவில் புதிய ஆப்பிள் ஐபோன் 4 எஸ் அறிமுகம்!

By Super
ரூ.44,500 விலையில் இந்தியாவில் புதிய ஆப்பிள் ஐபோன் 4 எஸ் அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரூ.44,500 ஆரம்ப விலையில் புதிய ஆப்பிள் ஐ-போன் 4-எஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏர்செல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஐபோன் 4 எஸ் அறிமுக விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஐபோனை அறிமுகம் செய்தார்.

முதல்கட்டமாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி, கோல்கட்டா மற்றும் மும்பை மாநகரங்களில் இந்த புதிய ஐபோன் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சர்வதேச சந்தையில் இந்த புதிய ஐ-போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த புதிய ஐ-போனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.

இதனால், புதிய ஐபோன் குறித்து இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய படைப்பு எப்போது கைக்கு வந்து சேரும் என்று வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஏர்செல் மற்றும் ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனங்கள் புதிய ஐபோன் 4 எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்தன.

சென்னையில் ஏர்செல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த புதிய ஐபோன் 4எஸ் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்று ஐபோன் 4-எஸ் மொபைலை அறிமுகம் செய்தார். இந்த விழாவில் முன்பதிவு செய்த 20 பேருக்கு புதிய ஐபோன் 4 எஸ் வழங்கப்பட்டது.

இந்த புதிய ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை இனி ஏர்செல் ஸ்டோர்களில் பெறலாம். 16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.44,500 விலையிலும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.50,900 விலையிலும், 64ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.57,500 விலையிலும்,கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X