Home
Mobile

அப்போ புரியல.. இப்போ புரியுது.. மொத்தமாக 3 புதிய போன்களை இறக்கும் TECNO நிறுவனம்.. என்னென்ன மாடல்?

டெக்னோ (Tecno) நிறுவனம் ஆனது "அப்புறமா மொத்தமா இறக்கி விடலாம்" என்று கடந்த 2025 ஜனவரியிலேயே முடிவு செய்துவிட்டது போல. ஏனென்றால் ஜனவரி 2025 இல் இந்நிறுவனம் எந்த புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவில்லை. மாறாக முன்னதாக அறிமுகமான அதன் 2 ஸ்மார்ட்போன்களின் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை அறிமுகம் செய்து இருந்தது.

இப்போது டெக்னோ நிறுவனம் கூடிய விரைவில் அதன் ஸ்பார்க் 40 சீரீஸ் (Tecno Spark 40 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. முதலில் டெக்னோ ஸ்பார்க் 40 சீரீஸின் கீழ் டெக்னோ ஸ்பார்க் 40, டெக்னோ ஸ்பார்க் 40 ப்ரோ மற்றும் டெக்னோ ஸ்பார்க் 40 ப்ரோ பிளஸ் ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

மொத்தமாக 3 புதிய போன்களை இறக்கும் TECNO நிறுவனம்!

பின்னர் டெக்னோ ஸ்பார்க் 30 சீரீஸில் உள்ள டெக்னோ ஸ்பார்க் 30சி மாடலை போல டெக்னோ ஸ்பார்க் 40சி மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் மேற்கண்ட எந்த மாடலின் முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. கூடவே டெக்னோ ஸ்பார்க் 40 சீரீஸின் சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்களும் இல்லை.

ஆனால் பெயர் குறிப்பிடுவது போலவே, டெக்னோ ஸ்பார்க் 40 சீரீஸ் ஆனது டெக்னோ ஸ்பார்க் 30 சீரிஸின் நேரடி "வாரிசு" ஆக இருக்கும் என்பதில் சந்தேகமும் வேண்டாம். அதாவது ஸ்பார்க் 30 சீரீஸில் உள்ள மாடல்களுடன் ஒப்பிடும் போது சில நல்ல முன்னேற்றங்களை (சிறிய விலை அதிகரிப்பை) ஸ்பார்க் 40 சீரீஸில் நாம் எதிர்பார்க்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ நிறுவனம் அதன் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆன டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (Tecno Spark 30C 5G) ஸ்மார்ட்போனின் புதிய 8ஜிபி ரேம் வேரியண்ட்டை, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இது கடந்த அக்டோபர் 2024 இல் இந்தியாவில் அறிமுகமான போது 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆகிய 2 வேரியண்ட்களில் மட்டுமே அறிமுகமானது.

பின்னர் ஜனவரி 2205 இல் புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அறிமுகமானது. 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் முறையே ரூ.9,998 மற்றும் ரூ.10,498 க்கு பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்த புதிய வேரியண்ட் 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் வருகிறது என்பதால் இந்த வேரியண்ட்டின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். இது மிட்நைட் ஷேடோ, அரோரா ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் HD LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி விர்ச்சுவல் ரேம் வழியாக 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜை வழங்கும்

கேமராக்களை பொறுத்தவரை இது LED ஃபிளாஷ் யூனிட் உடனான 48-மெகாபிக்சல் சோனி IMX582 ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. டால்பி அட்மாஸ் ஆதரவு உடனான இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. அது 18W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno to launch Spark 40 series smartphones soon all you need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X