Home
Mobile

ரூ.12,000 பட்ஜெட்ல.. பக்கா iPhone டிசைன்.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 4GB ரேம், FHD+ டிஸ்பிளே.. என்ன மாடல்?

இந்திய சந்தையில், ஐபோன் போன்ற வடிவமைப்பில் (iPhone-like Design) ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாவது ஒன்றும் முதல் முறை அல்ல. இருப்பினும் டெக்னோ (Tecno) நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ஐபோன் போன்ற கேமரா செட்டப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை..

கூடவே ரூ.12,000 என்கிற பட்ஜெட்டை சுற்றிய விலையில் மற்ற சில தரமான அம்சங்களின் மீதும் கவனம் செலுத்தி உள்ளது. இது என்ன மாடல்? இது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வெளியாகும்? இதோ விவரங்கள்:

ரூ.12,000 பட்ஜெட்ல.. பக்கா iPhone டிசைன்.. என்ன மாடல்?

நாம் இங்கே பேசுவது - டெக்னோ ஸ்பார்க் 20 (Tecno Spark 20) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைக்கும் டெக்னோ ஸ்பார்க் 10 (Tecno Spark 10) மற்றும் டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி (Tecno Spark 10 5G) ஸ்மார்ட்போன்களின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (4GB RAM + 128GB Storage) உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 SoC) உடன் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 20 ஆனது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை (50MP Main Camera) உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டிருக்கும்; இருப்பினும் அதனுடன் உள்ள ஃபிளாஷ் யூனிட் (Flash Unit) உடன் சேர்த்து பார்க்கும் போது, அது (ஐபோன்களில் உள்ள) ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) போல் காட்சியளிக்கும்.

இதேபோன்ற கேமரா செட்டப் தான டெக்னோ ஸ்பார்க் 10 ஸ்மார்ட்போனில் காணப்படுகிறது. அதாவது 2 கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆனது சதுர வடிவிலான மாட்யூலில் வட்ட வடிவிலான வளையங்களில் (Circular rings in the Square shaped module) உட்பொதிக்கப்பட்டு இருக்கும்.

மேலும் டெக்னோ ஸ்பார்க் 20 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைஓஎஸ் 13 (HiOS 13) உடன் இயங்கலாம். இது 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (720×1612 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டிருக்கும். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்கிற கேள்விக்கான பதில் பிரபல டிப்ஸ்டர்களில் ஒருவரான பராஸ் குக்லானியிடம் (Paras Guglani) உள்ளது. அவரின் கூற்றுப்படி, டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்படும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 20 ஆனது எப்படியும் ரூ.15,000 க்குள் என்கிற (Under Rs.15,000) பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும். ஏனென்றால் இதற்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமே ரூ.15,000 க்குள் தான் உள்ளது. நினைவூட்டும் வண்ணம் டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி-யின் விலை ரூ.14,499 ஆகும்.

எனவே 4ஜி வேரியண்ட் ஆக வெளியாகவுள்ள டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போனும் கண்டிப்பாக ரூ.15,000 க்குள் தான் அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும். ஏனென்றால் இதற்கு முன்பாக வெளியான டெக்னோ ஸ்பார்க் 10 4ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.11,699 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno to Launch New Smartphone in India soon Tecno Spark 20 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X