டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. வரும் ஜூன் 23-ம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720×1640 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹிலீயோ பி22 12என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 சாதனத்தில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.மேலும இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








