Tecno நிறுவனம் மலிவு விலையில் ஸ்பார்க் பவர் 2 ஏர் போன் அறிமுகம் செய்ய ரெடி!

|

டெக்னோ நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மாடலை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. மலிவு விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் பட்டியல் வரவிருக்கும் டெக்னோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன், செப்டம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று டெக்னோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் என்ன சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று நிறுவனம் சில முக்கிய விவரங்களையும் இப்பொழுது வெளிப்படுத்தியுள்ளது.

சார்ஜ் செய்தால்

பிளிப்கார்ட் பட்டியலின் படி, டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன், ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு தடையின்றி பயன்படுத்தும் பேட்டரி சக்தியுடன் வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர், 7' இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும் என்பதைப் பட்டியல் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்பார்க் பவர் 2 ஏர்

இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்குமென்றும் கூறப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் இந்தியாவில் ரூ.9,000 பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் #PowerPlayEntertainment என நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சிறந்த பேட்டரி கொண்டதாகக் கூறப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளேயுடன், வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேயாக தான் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமரா டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டதை விட அதிகப்படியான பிக்சலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு எந்த விவரமும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Tecno Spark Power 2 Air with huge 7-inch display launching in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X