நம்ப முடியாத மலிவு விலையில் 6000mah பேட்டரி, 4 கேமராவுடன் Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் அறிமுகம்!

|

டெக்னோ நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மாடலை இன்று, செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர், மலிவு விலையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் விபரங்களை பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன், செப்டம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன், மிரட்டலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிளிப்கார்ட் விற்பனை எப்பொழுது?

பிளிப்கார்ட் விற்பனை எப்பொழுது?

பிளிப்கார்ட் பட்டியலின் படி, டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன், வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு தடையின்றி பயன்படுத்தும் பேட்டரி சக்தியுடன் வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பையும் மலிவு விலையில் சாத்தியமாக்கியுள்ளது.

1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?

விலை என்ன?

விலை என்ன?

இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்குமென்று கூறப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் இந்தியாவில் வெறும் ரூ.8,499 என்ற மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் #PowerPlayEntertainment என நிலைநிறுத்தப்படும் சிறந்த பேட்டரி பயன்பாடுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சம்

Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சம்

  • 7' இன்ச் எச்டி பிளஸ் (720x1,640 பிக்சல்கள்) வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளே
  • 2 ஜிஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 குவாட் கோர் செயலி
  • ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட HIOS 6.1 இயங்குதளம்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
குவாட் கேமரா அமைப்பு
  • குவாட் கேமரா அமைப்பு
  • 13 மெகாபிக்சல் பின்புற பிரைமரி கேமரா
  • இரண்டு 2 மெகாபிக்சல் கொண்ட பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார்
  • ஏஐ லென்ஸ்
  • குவாட் எல்இடி ஃபிளாஷ்
  • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா

Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!

கைரேகை
  • பின்புற கைரேகை சென்சார்
  • டூயல் நானோ சிம்
  • புளூடூத் v5
  • 4 ஜி எல்டிஇ,
  • வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி
  • 6000 எம்ஏஎச் பேட்டரி
  • நிறம்: காஸ்மிக் ஷைன் & ஐஸ் ஜாடிட்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Spark Power 2 Air With 6,000mAh Battery, Quad Camera Launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X