நம்ப முடியாத மலிவு விலையில் 6000mah பேட்டரி, 4 கேமராவுடன் Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் அறிமுகம்!
டெக்னோ நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மாடலை இன்று, செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர், மலிவு விலையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் விபரங்களை பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்
டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன், செப்டம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன், மிரட்டலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிளிப்கார்ட் விற்பனை எப்பொழுது?
பிளிப்கார்ட் பட்டியலின் படி, டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன், வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு தடையின்றி பயன்படுத்தும் பேட்டரி சக்தியுடன் வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பையும் மலிவு விலையில் சாத்தியமாக்கியுள்ளது.

விலை என்ன?
இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்குமென்று கூறப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் இந்தியாவில் வெறும் ரூ.8,499 என்ற மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் #PowerPlayEntertainment என நிலைநிறுத்தப்படும் சிறந்த பேட்டரி பயன்பாடுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சம்
- 7' இன்ச் எச்டி பிளஸ் (720x1,640 பிக்சல்கள்) வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே
- 2 ஜிஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 குவாட் கோர் செயலி
- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட HIOS 6.1 இயங்குதளம்
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- குவாட் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பின்புற பிரைமரி கேமரா
- இரண்டு 2 மெகாபிக்சல் கொண்ட பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார்
- ஏஐ லென்ஸ்
- குவாட் எல்இடி ஃபிளாஷ்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- பின்புற கைரேகை சென்சார்
- டூயல் நானோ சிம்
- புளூடூத் v5
- 4 ஜி எல்டிஇ,
- வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி
- 6000 எம்ஏஎச் பேட்டரி
- நிறம்: காஸ்மிக் ஷைன் & ஐஸ் ஜாடிட்




Click it and Unblock the Notifications