Home
Mobile

ஆக.14-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரியுடன் 5G போன்.. 7.99எம்எம் ஸ்லிம் பாடி.. எந்த மாடல்?

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO Spark Go 5G) மாடலின் இந்திய வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. இந்தியாவின் ஸ்லிம்மஸ்ட் மாடலாக களமிறங்க இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் கிடைக்க இருக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய மார்கெட்டில் இந்த டெக்னோ மாடல் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமோசான் (Amazon) தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும், மைக்ரோசைட் மூலம் உறுதியாகி இருக்கிறது. மேலும், பேட்டரி, தடிமன் மற்றும் எடை போன்ற பீச்சர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோக என்னென்ன ஏஐ பீச்சர்கள் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக.14-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரியுடன் 5G போன்!

மெட்டாலிக் கோட்டிங் மிடில் ஃபிரேம் (Metallic Coating Middle Frame) மற்றும் ஹரிசோன்டல் ரியர் கேமரா சிஸ்டம் (Horizontal Rear Camera System) போன்ற டிசைன் கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கிறது. மொத்தமாக ஸ்கை ப்ளூ ஷேட் கலரில் டிசைன் உறுதியாகி இருக்கிறது. இப்போது என்னென்ன பீச்சர்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications): இந்த டெக்னோ போனில் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், வெறும் 7.99எம்எம் தடிமன் கொண்ட ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல வெறும் 194 கிராம் எடை மட்டுமே வருகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் கிடைக்கிறது.

இதுபோக டைனாமிக் பார் (Dyamic Bar) மற்றும் ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் (AI Writing Assistant) கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) பீச்சரும் இதில் கிடைக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே டெக்னோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதே பீச்சர்களுடன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய 2 தளங்களிலும் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.

ஆக.14-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரியுடன் 5G போன்!

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனின் விலை ரூ.10,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்னறால், இதற்கு முன்பு வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ 2 (TECNO Spark Go 2) மாடலின் விலை ரூ.6,999ஆக மட்டுமே இருக்கிறது. அதேபோல இதுவரையில் வெளியான டெக்னோ ஸ்பார்க் சீரிஸ் மாடல்களின் விலையும் ரூ.10,000 பட்ஜெட்லேயே உள்ளன.

ஆகவே, இந்த புதிய மாடலையும் கம்மி பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஆகவே, இதிலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனின் பீச்சர்களை பார்க்கையில், ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் உள்ளது. மேலும், 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொடுக்கிறது. இதுபோன்ற பீச்சர்களை புதிய மாடலில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 5G With 6000mAh Battery To Launch in India on August 14 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X