Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் நம்ப முடியாத கம்மி விலைக்கு டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO Spark Go 5G) ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 120 Hz டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 10 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.10,849 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,049 விலைக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைத்தாலும், டிசைனில் ரூ.20,000 பட்ஜெட் கொண்ட மாடலுக்கு நிகராக இருக்கிறது. இந்த டிசைன் மட்டுமல்லாமல், டைனாமிக் போர்ட் (Dynamic Port), எல்லா ஏஐ அசிஸ்டன்ட் (Ella AI Assistant) கிடைக்கிறது. மேலும், ஏஐ கால் அசிஸ்டன்ட், ஏஐ ஆட்டோ ஆன்சர் கிடைக்கிறது. 5 வருடங்களுக்கு லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் எக்ஸ்பான்ஷன் கொடுத்துள்ளது. 128 ஜிபிக்கு மேல் ஸ்டோரேஜ் வேண்டுமானால், மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம். 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைத்துள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

50 எம்பி மெயின் கேமராவை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 2K ரெசொலூஷன் கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைத்துள்ளது. சிங்கிள் பாட்டம்-பேர்டெட் ஸ்பீக்கர் (Single Bottom-ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 7.99 எம்எம் தடிமன் வருவதால் ஸ்லிம் மாடலாக கிடைக்கும்.

194 கிராம் எடை கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) உள்ளது. ஸ்கை ப்ளூ, இன்க் பிளாக், டர்க்கைஸ் கிரீன் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 5G With 6000mAh Battery Available At Discounted Price in Amazon Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X