தீபாவளிக்கு இதை விட என்ன வேணும்.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.10,000 விலையில் ஸ்மார்ட்போன் தேடிக்கொண்டிருக்கும் பட்ஜெட் பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (Tecno Spark Go 5G) கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் கொண்ட இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,000 பட்ஜெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆஃபரில் கிடைக்கின்றன. ஆனால், பிரீமியம் லுக் கொடுக்கும்படி ஒரு சில மாடல்களே இருக்கின்றன. இதில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி பார்த்தாலே வாங்க தோன்றும்படியான ஹரிசோன்டல் கேமராவுடன் பிரீமியம் டிசைனில் ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்குகிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவாக ரூ.9,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த விலையிலும் ரூ.6,840 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சரும் வருகிறது.
அதேபோல மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. எல்லா ஏஐ (Ella AI), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant) போன்ற பட்ஜெட்டில் கிடைக்காத பீச்சர்களுடன் ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பர்ஃபாமென்ஸ் கூடுதலாகவே கிடைக்கும். அதேபோல 5ஜி பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி கொடுக்கப்படும். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த கேமராவில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் டைப் சி (Type C) சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. எஸ்சி கார்டு சிலாட் கிடைக்கிறது.
இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்கை ப்ளூ (Sky Blue), இன்க் பிளாக் (Ink Black) மற்றும் டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், பைகானர் ரெட் (Bikaner Red) கலரும் விற்பனைக்கு கிடைக்கிறது. டிடிஎஸ் ஆடியோ, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








