Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிர்கார்ட் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO Spark Go 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே, அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இதில் கூடுதலாக கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக மலிவு விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி குறித்த விவரம் இதோ.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் ஏகப்பட்ட 5ஜி மாடல்கள் கிடைக்கின்றன. இதனால், டிசைன் மற்றும் பீச்சர்களை பார்த்து வாங்க வேண்டி இருக்கிறது. இதில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் பிரீமியம் லுக்கில் ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா

பிரீமியம் லுக் கொடுக்கும் கேமரா டிசைனுடன் ஸ்கை ப்ளூ (Sky Blue), இன்க் பிளாக் (Ink Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. சொல்லப்போனால், டிசைனுக்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றவைக்கும்படி டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி இருக்கிறது. மற்ற பீச்சர்களுக்கு முன்பு விலை விவரங்களை பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையோடு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதலாக கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, குறிப்பிட்ட கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இது கம்மியாக தோன்றலாம். ஆனால், டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனின் விலையே ரூ.9,999ஆக இருக்கும்போது, ரூ.500 டிஸ்கவுண்ட் என்பது லாபமாகவே இருக்கிறது. ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். பீச்சர்களை பார்ப்போம்.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications): டிசைனில் மட்டும் கவனம் செலுத்தாமல், பர்ஃபாமென்ஸ் பக்கமும் டெக்னோ கவனம் செலுத்தி இருக்கிறது. ஏனென்றால், ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் கொடுத்துள்ளது. அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்து இருக்கிறது.

இப்போது, வரும் ஸ்மார்ட்போன்களில் ஏஐ பீச்சர்கள் அதிகமாக வருவதால், இதிலும் ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) மூலம் எல்லா ஏஐ (Ella AI) கிடைக்கிறது. இதுபோக ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ அன்ஸர் (AI Auto Answer) போன்ற பீச்சர்களுடன் ஏற்கனவே கிடைத்துவந்த டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சரும் கொடுக்கிறது.

மீடியம் கேமிங் மற்றும் பிக்சர் அவுட்புட் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டாலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை பேக் செய்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டைனாமிக் போர்டுக்கு ஏற்ப பஞ்ச்-ஹோல் நாட்ச் கிடைக்கிறது. ஆனால், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்காது, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ஸ்பார்க் கோ 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 5G With 50MP Camera Available Under Rs 10000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X