தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.9,499 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO Spark Go 5G) போன் அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் கொண்ட இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட மாடல் பட்ஜெட்டில் கிடைத்தால் எப்படி இருக்கும், அப்படியான டிசைனில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி களமிறங்கி இருக்கிறது. கேமரா பம்ப் பிரீமியம் லுக் கொடுக்கிறது. டைனாமிக் போர்ட் (Dynamic Port) மட்டுமல்லாமல், எல்லா ஏஐ (Ella AI), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ அன்ஸர் (AI Auto Answer) போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களை கொடுக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications): இந்த டெக்னோ மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஶன் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் எதிர்பார்த்தும், 120Hz ஆக கிடைத்திருக்கிறது.
அதேபோல லேட்டஸ்ட் யுஐ கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது. அதேபோல யுனிசோக் சிப்செட் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை கொடுத்து மிரளவிட்டிருக்கிறது. இதற்கேற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி டைனாமிக் ரேட் கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் ஸ்டோரேஜ் பெற்று கொள்ள டூயல் நானோ சிம் சிலாட் மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இதில் கிடைக்கிறது. சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ போன் கொடுக்கிறது. இந்த மெயின் கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மட்டுமே கிடைத்தாலும், அதில் டிடிஎஸ் (DTS) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், சிப்செட் மற்றும் கேமரா பீச்சர்களுக்கு அடுத்த டாப் பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் 5ஜி மாடலாக இருந்தும் 6000mAh பேட்டரியை கொடுக்கிறது. இதற்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.9,499 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஸ்கை ப்ளூ (Sky Blue), இன்க் பிளாக் (Ink Black), டர்க்கைஸ் கிரீன் கலர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








